வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் காண முடியாத சப்த மாதர்கள்
Page 1 of 1
வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் காண முடியாத சப்த மாதர்கள்
வேலூர் புதிய பஸ் நிலையத்தின் அருகே பாலாற்றங்கரையில் மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை குலதெய்வமாக மக்கள் குறைதீர்க்கும் செல்லியம்மன் கோவில் உள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எத்தமரெட்டியின் முதல் மனைவிக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பொம்மி, திம்மி எத்தமரெட்டியின் 2-வது மனைவியின் மகன்கள் சொத்து பிரச்சினையில் பொம்மி, திம்மி இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
அவர்களிடம் இருந்து பொம்மி திம்மி இருவரும் தப்பி வந்து சேர்ந்த இடம் வேலூர் பாலாற்றங்கரை. அப்போது வேலூர் மன்னரிடம் தங்கள் நிலைமையை சொல்லி தங்குவதற்கு இடம் ஒதுக்கும் படி கேட்டனர். அப்போது மன்னர் காட்டிய இடத்தில் வாழ்ந்த பொம்மி, திம்மி இருவரும் அங்கிருந்த எல்லையம்மன் கோவிலில் வழிபாடுகள் செய்தனர்.
அந்த கோவிலில் உள்ள சப்த மாதாக்களில் ஒருத்தியை தங்கள் குல தெய்வமான சாமூண்டீஸ்வரியாக பாவித்து வணங்க ஆரம்பித்தனர். அந்த காலத்தில் ஊருக்குள் நுழைந்த கொள்ளையர்களை திம்மியும், பொம்மியும் அம்பாள் சக்தியை பெற்று பந்தாடி ஊரை விட்டு துரத்தினர். இதன் மூலம் அம்மனின் மகிமையை உணர்ந்த மக்கள் அன்னைக்கு செல்லியம்மன் என்று பெயர் சூட்டி வணங்க தொடங்கினர்.
இப்படி மன்னர்கள் காலம் முதல் இன்று வரை பக்தர்களுக்கு பல்வேறு இன்னல்களை தீர்த்து அருள்பாலிக்கிறார் செல்லியம்மன். இந்த கோவில் கருவறையில் தீ ஜுவாலை பீடத்துடன் 4 கைகள் சூலம், கபாலம் ஏந்தி கிழக்கு நோக்கி சப்த மாதர்களின் ஒருவரான செல்லியம்மன் அருள்பாலிக்கிறார்.
இதற்கு பின்புறம் பிராம்மி, வாராகி, வைஷ்ணவி, சாமூண்டீஸ்வரி, கௌமாரி, மாகேஸ்வரி ஆகிய 6 சப்த மாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த 6 மாதர்கள் செல்லியம்மனுக்கு அலங்காரம் செய்தால் வெளியே தெரிவதில்லை. செல்லியம்மனுக்கு பின்னால் மறைந்திருந்து அருள்பாலிக்கும் இந்த சப்த மாதர்களை பக்தர்கள் காண்பது அரிது.
அதிகாலை நேரத்தில் நடைபெறும் அபிஷேக நேரத்தில் மட்டுமே செல்லியம்மனை தவிர 6 சப்த மாதர்களையும் தரிசிக்க முடியும். கோவிலில் ஆடி மாதங்களில் 1008 பால்குட அபிஷேகம் நடக்கிறது. இத்திருக்கோவிலின் பிரகாரத்தின் முன்பு அணையா விளக்கு ஒளிர்கிறது. அதன் அருகே எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வழிபடுகின்றனர்.
வேலூரில் உள்ள 700 குடும்பங்களுக்கு குல தெய்வமாக சப்தமாதர்கள் அருள்பாலித்து வருகிறார். இந்த குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் அனைத்து விசேஷசங்களுக்கும் முன்னதாக கோவிலுக்கும் வந்து அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே விழா நடத்துகின்றனர். வேலூரில் புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கி செல்பவர்கள் எந்த ஊர்காரராக இருந்தாலும் செல்லியம்மன் முன்பு வாகனத்தை நிறுத்தி பூஜை செய்த பின்னரே வீடுகளுக்கு கொண்டு செல்வதை தினமும் காணமுடியும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் காண முடியாத சப்த மாதர்கள்
» வேலூர் செல்லியம்மன் கோவில்
» சப்த மாதர்கள்
» சப்த மாதர்கள்
» திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்
» வேலூர் செல்லியம்மன் கோவில்
» சப்த மாதர்கள்
» சப்த மாதர்கள்
» திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum