தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்

Go down

திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள் Empty திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்

Post  amma Sun Jan 13, 2013 1:55 pm

ஓரு சமயம் தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கியிருந்து வழிப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது மான் ஓன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பியோடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. முனிவரும் அதற்கு அபயம் அளித்தார். இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான்.

அடியரின் துயரை நொடியில் தீர்க்கும் இறைவன் புலி உருவம் கொண்டு வேடனை துரத்தினார். உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டான். வேடனோ வேறு வழியின்றி மரத்தின் மீதே இருக்க வேண்டியது ஆயிற்று. பசியும் பயமும் அவனை வாட்ட இரவும் வந்தது.

களைப்பினால் தூக்கம் வந்துவிடும் என்பதால் தூங்காமலிருக்க மரத்திலிருந்து ஓவ்வொரு இலைகளாக பறித்துக் கீழே போட்டுக்கொண்டு இருந்தான். அவன் இருந்த மரம் வில்வ மரம் அன்றிரவு மகாசிவராத்திரியானதால் அவன் பறித்து போட்ட இலைகள் அனைத்தும் புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது அர்ச்சனைகளாக விழுந்து கொண்டிருந்தன.

இதனால் ஊன் உரக்கமின்றி சிவனை வழிப்பட்ட புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது. இறைவன் வேடனுக்கு மோட்சமளித்து அருளினார். இந்த நிலையில் விடிந்தால் அவனது ஆயுள் முடியும் காலம் வந்தது. பொழுது விடிந்ததும் வேடனின் உயிரை பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். நந்தி தேவர் தடுத்தும் கேளாமல் உட்புகுந்தான். உடனே தட்சினமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன் கையில் கோலேந்தி எமனை விரட்டினார் என்றாலும் எமன் விடவில்லை.

இதற்கிடையில் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி தான் சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையில் நந்தி வாயிலை நோக்கியவாறும் தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர். மேலும் கற்புக்கரசி ஓருத்தியின் சாபம் பெற்ற விஷ்னு அதனை போக்க இங்கு வந்து தவம் செய்ததால் அறியீசர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.

இதேப்போல் அக்கினியும் பிரமனும் தீர்த்தம் அமைத்து வழிப்பட்டுள்ளனர். அதனால் அக்கினியின் ஒளி குறையும் தன்மை நீங்கியதாகவும் பிரம்மனின் படைப்புத் தொழில் மேம்பட்டதாகவும் புராணம் கூறுகிறது. சப்த மாதர்கள் உத்தவ முனிவரால் தமக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கும் பொருட்டு இங்குள்ள எம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி அஷ்டமா சித்திகளைத் திரும்ப பெற்றனர்.

சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் இருந்து தென் நாட்டிற்கு வந்த போது காவிரியின் வட கரையில் மிகச் செழிப்பாக அமைந்த திருவைகாவூரில் எழுந்தருளியதாகவும் இதனை அறிந்த பூமாதேவி வந்து அவர்களை வணங்கி வழிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையொட்டி புமிபுரம் என்ற பெயரும் வழங்குகிறது.

இதே போல் ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக் கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவனை வணங்கி தம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள வழி கேட்டு இறைவன் கூறிய படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகக்கூறுவர்.இதனால் இத்தலம் வில்வவனம் என்றும் இங்கு உறையும் இறைவன் வில்வ வனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இதேப்போல் சிவராத்திரியன்று தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் நகையை ஒருவன் திருடிய போது அக்குழந்தையை கொலை செய்து விட்டதாகவும் அடியோன் வேண்டுகோளுக்கிணங்க அக்குழந்தையை இறைவன் மீண்டும் உயிர்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மகலஸ்ரீசுவரர் என்ற பெயரும் உண்டு.

மரணத்தைக்கண்டு அஞ்சதா மனிதர்களே இல்லை. அந்த வகையில் மரண பயம் நீங்கி அருள்புரியும் தவமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த இறைவனை வணங்கி வாழ்வில் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் பெறலாம்.

ஸ்ரீ சப்தமாதா:-.7 பேர் அக்காள், தங்கைகள் 1. வாரவரி, கோதாவரி, இந்திராணி, மகேஸ்வரி, எம்புரவரி, ஊர்வரி, சாமுண்டி பத்ரகாளி. ஸ்ரீ சப்தமாதா உள்ள இடத்திற்கு நேர் எதிர்புறம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் உள்ளார். ஸ்ரீ சப்த மாதாவை வழிபட்டால் திருமண தோஷம் தடைகள் நீங்கும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் நிவர்த்தி அடையும். அர்சனை அபிஷேகம், நெய்விளக்கு ஏற்றி வழிப்பட்டால் செல்வம் பெருகும். பலன் கிடைக்கும்.

முருகன்:-இங்குள்ள முருகனின் மயில்வாகனம் மாறி அமர்ந்திருக்கும். மயில் பாம்பை கவ்விக்கொண்டு இருக்கும். ஆறுமுகம் கொண்ட சுப்பிரமணியன் 12 கைகள் உள்ளவாறு கையில் ஸ்ரீசக்கரம், சங்கு சக்கரம் வைத்திருப்பது போல் ஒரே சிற்பம். இது வேறு எங்கும் இல்லை. கையில் கோல் ஏந்திய நிலையில் தட்சிணாமூர்த்தி சிற்பம் நந்தி பகவான் கிழக்கு பார்த்து அமர்ந்திருப்பார். காரணம் எமதர்மனை விரட்டியடிப்பதற்காக கிழக்கு பார்த்த நிலையில் அமர்ந்திருப்பார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum