தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சப்த மாதர்கள்

Go down

சப்த மாதர்கள் Empty சப்த மாதர்கள்

Post  amma Sun Jan 13, 2013 2:03 pm

தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு சிறப்பிடம் பெறும் ஏழு பெண் தெய்வங்கள் சப்தமாதர்கள் அல்லது சப்த மாத்ருக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களை சப்த கன்னியர் என்றும் அழைப்பதுண்டு.

இவர்கள் முக்கியமான இந்து சமய தெய்வங்களின் சக்திகளாவர். பிராமி (சரஸ்வதி), மகேஸ்வரி (சிவசக்தி), கௌமாரி (குமாரசக்தி), வைஷ்ணவி (லட்சுமி), வாராகி, மாகேந்திரி (இந்திராணி), சாமுண்டா (சாமுண்டி) என்னும் சக்திகள் ஏழுவரும் முறையே பிரம்மா, சிவன், முருகன், விஷ்ணு, வராகமூர்த்தி, இந்திரன், யமன் என்போரின் சக்திகளாக இருந்து வேண்டுவோருக்கு வேண்டிய பலன்களைத் தருகின்றனர்.

இந்த ஏழு பேரின் திருமேனிகள் சிவாலயத்தில் ஆவரணப் பகுதியில் விளங்கும். மேலும் தனித்து அருள் வழங்கும் அம்பிகை வழிபாட்டிலும் அம்பிகையைப் பார்த்தவாறு விளங்குவர். சப்தமாதர்களின் திருமேனிகளை பிரதிஷ்டைக்கு முன் வினாயகர், வீரபத்திரர், பைரவர் திருமேனி ஏதேனும் ஒன்றினை நிறுவி தொடர்ச்சியாக சப்தமாதர்களை அமைப்பர்.

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் தனித்த நிலையில் சப்த மாதர்களுக்கு கோவில்கள் பல உள்ளன. சப்தமாதர்களின் தோற்றம் தொடர்பாக வேறுபட்ட புராணக் கதைகள் கூறப்படுகின்றன. சிவனுக்கும் அந்தகாசுரன் என்னும் அசுரனுக்கும் இடையேயான போரில் சிவனுக்கு உதவியாக தோற்று விக்கப்பட்டவர்கள் என வராக புராணத்தில் கூறப்படுகின்றது.

சிவன் அந்தகாசுரனுடன் போரில் ஈடுபட்டபோது அந்தகாசுரனின் உடலில் இருந்து வழிந்த ரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில் சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்கினியிலிருந்து யோகேசுவரி என்னும் சக்தியை உருவாக்கினார் எனவும் மகேசுவரி என்னும் பெயருடைய சக்தியும் இவரால் உருவாக்கப்பட்டது எனவும் பிரம்மா, இந்திரன், வராகமூர்த்தி, விஷ்ணு, குமரன், யமன் என்போரும் தமது சக்திகளை சிவனுக்குதவியாக விளங்கினர் எனவும் வராக புராணம் கூறுகின்றது.

சும்ப என்ற அரக்கனை அழிப்பதற்காக அம்பிகைக்கு துணையாக மாத்திரிகள் தோற்றுவிக்கப்பட்டனர் என மார்க்கண்டேய புராணமும் தேவி மகாத்மியமும் கூறுகின்றன. நைரித என்பவனுக்கு எதிராகப் போரில் பிரம்மாவிற்கு உதவியாக இவர்கள் தோற்றுவிக்கப்பட்டனர் என சுப்ரபேதாகமத்திலிருந்து அறிய முடிகின்றது.

மாத்திரிகர்களின் எண்ணிக்கை, அவர்களைக் கூறும் ஒழுங்கு தொடர்பாக வேறுபாடுகளுமுண்டு. மாத்திரிகர்களின் எண்ணிக்கை ஏழாகக் காணப்படினும் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான மாத்திரிகள் பற்றிய குறிப்புகளுமுண்டு. கந்த புராணம், தேவி புராணம், பிரம்மவைவர்த்த புராணம் என்பவனவற்றில் பல மாத்திரிகள் குறிப்பிடப்படுகின்றன.

தேவி பாகவதம் நித்ய சோடசிகார்ணவ பிரபஞ்ச சார தக்கிரம், லிங்க புராணம், மந்தரமஹோததி, வராகபுராணம் போன்ற நூல்கள் எட்டு மாத்திரிகர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. கதாசரித்சாகரம் என்னும் நூல் நாராயணி தலைமையிலான மாத்திரிகளைக் குறிப்பிட்டாலும் அவர்களின் பெயர்களைத்தரவில்லை.

வேறு சில நூல்கள் பதினாறு மாத்திரிகர்களை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையிலான மாத்திரிகர்கள் குறிப்பிடப்பட்டாலும் மாத்திரிகர்களின் சிற்பங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி என்னும் சப்த மாத்திரிகர்களே சில வேறுபாடுகளுடன் காட்டப்படுவதனைக் காணலாம்.

முற்கால சாணக்கியர்களின் கல்வெட்டுக்களிலும் மாத்திரிகர்களின் எண்ணிக்கை ஏழாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கினி புராணம், அம்சுத் பேதாகமம், பூர்வகாரணாகமம், மச்ச புராணம், ரூபாவதாரம், ரூப மண்டனம், விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ஸ்ரீதத்வநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம், தேவி புராணம் போன்ற நூல்களில் சப்த மாத்திரிகர்களின் உருவ அமைப்பினைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின் ஆயுதங்கள், ஆபரணங்கள், வாகனம், கொடி என்பனவற்றினைக் கொண்டு காணப்படுவர். சப்தகன்னிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலங்களில் மக்கள் குறைகளை தீர்த்து அருள்பாலித்து வருகிறார்கள். அந்த தலங்கள் மற்றும் அங்கு சென்று வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை மாலைமலர் இந்த மலரில் தொகுத்து வழங்கியுள்ளது. படித்து பலன்பெற வாழ்த்துக்கள்!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum