மார்பு, தோள்களுக்கான எலாஸ்டிக் கயிறு பயிற்சி
Page 1 of 1
மார்பு, தோள்களுக்கான எலாஸ்டிக் கயிறு பயிற்சி
உடலை அழகாக்கவும், உறுதியாக மாற்றவும் சற்று எலாஸ்டிக் தன்மை இருக்கிற ஒரு கயிறு போதும். நீங்கள் வீட்டிலேயே இதைப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்ளமுடியும்.ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் போதும். உடலின் ஒவ்வொரு தசையும் பயிற்சியில் பங்கு பெறுவதால் முழு உடல் நலம் காக்கப்படுகிறது. படு சுலபமானது. படு விலை குறைவானது.
செய்முறை... இடது காலை வலது காலை விட சற்று முன்பாக நீட்டுங்கள். கயிற்றை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். வலது காலின் கீழ் கயிற்றை மிதித்துக் கொள்ளுங்கள். மேல் கையை கழுத்துக்கு நேராக உயர்த்துங்கள்.
முன் கை 90 டிகிரிக்கு மடங்கி இருக்க இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தபடி சேர்த்து, பிரித்து பயிற்சி செய்யுங்கள். அடுத்த காலுக்கு கயிற்றை மாற்றி மறுபடியும் அதே போல பயிற்சியைச் செய்யவும். இவ்வாறு ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதும். நன்கு பயிற்சி பெற்ற பின்னர் படிப்படியாக அதிகரித்து 25 முதல் 45 முறை செய்யலாம். உங்களால் முடிந்தால் இன்னும் அதிகமாக செய்யலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum