குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
Page 1 of 1
குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலின் வலது புறத்தில் பாம்பாட்டி சித்தர் கோவிலுக்கு செல்லும் வழியில் சப்தகன்னிமார் கோவில் உள்ளது. சுமதி, கவுமாரி, மகேஸ்வரி, ராஜகன்னி, வைஷ்ணவி, பட்டதாரி கன்னி, கபந்திரி கன்னி ஆகியோர் சப்த கன்னிகளாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணமாகதவர்களும் சப்தகன்னிமாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. கன்னிப் பெண்கள் 3 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கன்னிமார் அம்மன்களுக்கு மஞ்சள் பொடி பூசி குங்குமம் அணிந்து வழிபட்டால் அவர்களுக்கு திருமணம் கைகூடுவதை கண்கூடாக காணலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
கன்னிமார் நீரோட்டம் இருக்கும் இடத்தில் தான் இருப்பார்கள். அதே போல் மருதமலையில் கன்னிமார் இருக்கும் இடத்தின் பாறையின் கீழ் நீரோட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். அம்மனுக்கு வளையல், பூ, மஞ்சள், குங்குமம், இனிப்பு மற்றும் பண்டங்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுகிறார்கள். தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை கோவில் திறந்திருக்கும்.
இந்த கோவிவின் அர்ச்சகர்களாக இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் சப்தகன்னிமார் கோவில் உள்ளது.
இங்குள்ள கன்னிமார் அம்மன்களை அமாவாசை தினம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கும், திருமணமாகாத வாலிபர்களுக்கும் திருமணம் நடைபெறும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கருகுமணி, மஞ்சள் துணி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தாலிச்சரடு ஆகியவற்றை அம்மனுக்கு வைத்து வழிபடுவார்கள். கன்னிமார் அம்மனை தரிசிக்க வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் கூட்டம் அலைமோதும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum