வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
Page 1 of 1
வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
எந்த வரம் வேண்டினாலும் அதை நிறைவேற்றிதரும் தெய்வங்களாக கடலூர் சப்த கன்னிகள் திகழ்கிறார்கள்.கடலூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலான பாடலீசுவரர் கோவிலில் இந்த சப்தகன்னிகள் கோவில் அமைந்துள்ளது. பாடலீசுவரர் கோவிலின் வலதுபுரம் தனி பிரகாரமாக சப்த கன்னிகள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 7 கன்னிகளில் நடுநாயகமாக ஒரு கன்னி அமைந்திருக்க இரு பக்கத்திலும் 3 கன்னிகள் வரிசையாக அமைந்துள்ளனர். பாடலீசுவரர் கோவிலில் வைகாசி பிரம்ம உற்சவம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சப்த கன்னிகளுக்கு தான் முதல் மரியாதை கொடுத்து பூஜை நடைபெறும் அதன் பின்னர்தான் மற்ற விழாக்கள் நடைபெறும்.
பாடலீசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சப்த கன்னிகள் கோவிலுக்கும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு சப்தகன்னிகளில் நடுநாயகமாக இருக்கும் கன்னியை பிடாரி அம்மன் என்று அழைக்கிறார்கள்.
7 கன்னிகளும் பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு கன்னிக்கும் ஒவ்வொரு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் பிராமி அம்மன் பிரம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார்.இவரை வழிபட்டால் பிரம்மனை வழிபடும் போது கிடைக்கும் அத்தனை பலன்களும் கிடைக்கும். இந்த சாமியை வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழிபடலாம்.
வேண்டிய வரங்களை இவர் தருவார். மாகேஸ்வரி ஈஸ்வரனின் அம்சமாகும். இவரை திங்கட்கிழமை வழிபடலாம். ஈஸ்வரனை வழிபட்டால் கிடைக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும். கவுமாரி முருகனின் அம்சமாகும். செவ்வாய்க்கிழமை இங்கு வழிபடுவது சிறப்பாகும். இவரை வழிபட்டால் முருகனை வழிபடும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
சாமுண்டி சண்டியின் அம்சமாகும். இங்கு வெள்ளிக்கிழமை வழிபடுவது நல்லது. இவரை வழிபட்டால் துஷ்டகாரியங்கள் அனைத்தும் விலகும். வைஷ்ணவி விஷ்னுவின் அம்சம். இங்கு சனிக்கிழமை வழிபட வேண்டும். விஷ்னுவை வழிபடும் பலன்கள் கிடைக்கும். வராகி வைஷ்ணவி அம்சமாகும். இங்கு புதன் கிழமை வழிபடலாம்.
இந்த சாமியை வழிபட்டால் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். மாந்ரீகத்தால் ஏற்படும் தீங்குகளும் நீங்கும். இந்திராணி இந்திரனின் அம்சம் ஆவார். வெள்ளிக்கிழமை இங்கு வழிபடுவது நல்லது. இந்திராணியை வழிபட்டால் அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum