குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு
Page 1 of 1
குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு
குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு
இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே பைரவர்.
சுவானத்வஜாய வித்மஹோ
சூலஹஸ்தய தீ மஹி
தந்தோ பைரவ ப்ரசோதயாத்
என்ற பைரவ காயத்ரி மந்திரத்தை ஆசாரத்துடன் தகுந்த குருநாதர் மூலம் உபதேசம் பெற்று பைரவ உபாஸணையில் ஈடுபடலாம். வாக்தேவியின் அருளுடன் கூடிய இவர் கேட்பதைத் தரும் இயல்புடையவர். நமது ஆலயங்களில் பைரவருக்கு தனிச் சன்னிதி உண்டு.
உதயகால பூஜை தொடங்கும் முன்னும் இரவு அர்த்தஜாம பூஜைக்குப் பின்னும் பைரவரை பூஜை செய்து, கோயில் காவலை பைரவரிடம் ஒப்படைப்பது வழக்கம். பைரவர் காவல் தெய்வம் பைரவாஷ்டகம் பைரவ அஷ்டோத்ரம், கால பைரவாஷ்டகம், இவைகள் நித்ய பாராயத்திற்கு ஏற்றவை. பைரவரை அஷ்ட பைரவர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
அவை கால பைரவர்,கல்பாந்த் பைரவர், க்ரோதந பைரவர், கபாலபைரவர், ஸம்ஹார பைரவர், உந்மத்த பைரவர், சண்ட பைரவர், உக்ர பைரவர் ஆகியவை. திருவண்ணாமலை, பட்டீஸ்வரம் முதலிய ஆலயங்களில் பைரவரின் சிற்பம் மிகவும் அழகானது என்கிறார் விஜய்சுவாமிஜி. .
பைரவர் ஆட்சி செய்யும் காசி:
காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர்.
காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும்,லாட் பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும்,ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும்,திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும்,பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்டபைரவரும் அஷ்டதிக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.
அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த் தனை கிடையாது. பைரவ வாதணை நிச்சயம் உண்டு. காசி மாநகர எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம்.
அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது. ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய "காசி கால பைர வாஷ்டகம்'' துதி பாடி வழி படும்போது எமபயம் நீங்கு கிறது. காசி கறுப்பு கயிறு அணியும்போது ஆயுள் விருத்தியாகிறது. எமபயம் நீங்க, எமவாதனை நீங்க காசி கால பைரவாஷ்டகத்துடன் காசி கறுப்பு கயிறு அணிந்து வளம்பெறுவோம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் தரும் மடப்புரம் காளி
» குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் தரும் மடப்புரம் காளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum