காய்கறி பழ சாலட்
Page 1 of 1
காய்கறி பழ சாலட்
தேவையான பொருட்கள்.....
உருளைக்கிழங்கு – 1
கேரட் - 1
வெள்ளரி – 1
தக்காளி -1
விதையில்லாத பச்சைத் திராட்சைப்பழம் - 10
விதையில்லாத சிவப்பு திராட்சைப்பழம் - 10
அன்னாச்சி பழம் - ¼ துண்டு
ஆப்பிள் - 1
பச்சை ஆப்பிள் - 1
ஆரஞ்சு பழம் - 1
ஃபிரஸ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
பெப்பர் - சிறிதளவு
செய்முறை.......
• உருளைக்கிழங்கு, கேரட்டை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி நீராவியில் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
• வெள்ளரி, தக்காளி சிறு துண்டுகளாக, ஆப்பிளை தோலுடன் வெட்டிக் கொள்ளுங்கள்.
• திராட்சையை வெட்டாமல் அப்படியே எடுங்கள். ஆரஞ்சு பழம் தோல் நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
• காய்கறி, பழங்கள் அனைத்தையும் உப்பு பெப்பர் கலந்து பிளேட்டின் நடுவில் வைத்து மேலே ஃபிரஸ் கிரீம் போட்டு பரிமாறுங்கள்.
• கலர்புல் சலட்டாக இருப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், பழ வகைகளும் சேர்வதால் பல்சுவையையும் தரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum