தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்கறி சாலட்

Go down

காய்கறி சாலட் Empty காய்கறி சாலட்

Post  meenu Thu Jan 31, 2013 2:42 pm

தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1 பெரியது
வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் -2
புதினா இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* அதே போல் காரட்டின் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும்.

* தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* நறுக்கிய காய்கறி துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிளறி கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து மீண்டும் ஒரு முறைக் கிளறி பரிமாறவும்.

* குடமிளகாய் மற்றும் கோஸ் போன்றவற்றையும் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். இந்த காய்கறி சாலட்டை அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளை கொண்டும் தயாரிக்கலாம். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum