காய்கறி சாலட் காய்கறி சாலட்
Page 1 of 1
காய்கறி சாலட் காய்கறி சாலட்
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
புதினா இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 தேவையான அளவு
செய்முறை:
* வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* கேரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
* தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கிய காய்கறி துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிளறி விடவும். பின்னர் அதில் எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து மீண்டும் ஒரு முறைக் கிளறி, அதன் மேல் காய்கறித்துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்.
* பார்ஸ்லி, லெட்டுஸ் கிடைத்தால், அதையும் பொடியாக நறுக்கிச் இதனுடன் சேர்த்து கொள்ளலாம். குடைமிளகாய் மற்றும் கோஸ் போன்றவற்றையும் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum