காய்கறி இடியாப்பம்
Page 1 of 1
காய்கறி இடியாப்பம்
தேவையான பொருள்கள் :
இடியாப்பம் - 3 கப் (நூடுல்ஸ் போல லூஸானதாக)
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
காரட் - 1 கப்
பீன்ஸ் - 1 கப்
காலி·பிளவர் - 1 கப்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கொத்துமல்லி - 3 டீஸ்பூன் (பொடியாக வெட்டியது)
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
• காரட், பீன்ஸ், காலி பிளவர் ஆகியவற்றை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில், கொத்துமல்லி, வெந்த காய்கறிகள், கரம் மசாலா, உப்பு அனைத்தையும் போட்டு, மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்போது தண்ணீர் தெளிக்கலாம்.
• நன்றாக வெந்ததும், இறக்கி ஆறவிடவும்.
• மீண்டும் வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுப் பொரிக்கவும்.
• அதில் காய்கறி மசாலாவைப் போட்டு வதக்கி, செய்து வைத்துள்ள இடியாப்பத்தைப் போட்டுக் கிளறவும்.
• நன்றாக மசாலா கலந்தவுடன், இறக்கிப் பரிமாறவும்.
• இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னியோ, குழம்போ தேவையில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum