எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
Page 1 of 1
எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
பொதுவாக கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து இறைவழிபாடுகள் மானிடராய் பிறந்த எல்லா உயிர்களும் நடத்தி வந்தது ஒரு தொடர் கதையாகும். புராணகாலம் இதிகாச காலம் வரை தெய்வ வழிபாடுகள் வேரூன்றி வந்தது.
இதில் மலைகள், மடுவுகள், குளக்கரைகள், நீரூற்றுகள்,மரங்கள் போன்றவற்றில் உருவ வழிபாடுகள் வைத்து மனிதர்கள் வணங்கி வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலையில் பல சித்தர்களும், ஞானிகளும்,யோகிகளும் தவம் செய்துள்ளனர்.
மேலும் கரந்தமலை கன்னிமார் அருவி எக்காலமும் வற்றாமல் சிற்றருவியாக வந்து கொண்டு இருக்கிறது. இங்கு சப்தகன்னிமார்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு எழுந்தருளப்பட்டுள்ளது.
இந்த கன்னிமார் தீர்த்தம் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம மக்களும் அறிந்ததே. நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா, பகவதியம்மன் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழா நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடி ஈர உடைகளுடன் தலையில் தீர்த்தக்குடங்கள் சுமந்து வந்து செல்வது பக்திபரவசத்தைக் காட்டும்.
மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் இந்த புனித தீர்த்தம் முக்கியத்தீர்த்தமாக பயன்படுத்தப்படும். குலதெய்வங்களை தெரியாத குடும்பத்தினர் இங்கு வந்து குறி கேட்டால் அந்த கோரிக்கை நிறைவு செய்யப்படும்.
மேலும் மழை வேண்டி இந்த கரந்தமலை கன்னிமார் கோவிலில் வனதேவதையை அழைத்து பூஜை நடத்தப்படும். இப்பகுதியில் உள்ள 18 பட்டி கிராம மக்களும் அங்கு நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்துவார்கள்.
பூஜை முடிந்து சுமார் 2 கி.மீ. தூரம் மலைப்பாதை நடந்துவந்து நல்ல பாதைக்கு வருமுன் மழைபெய்து விடும். இந்த அதிசயம் ஆதிகாலம் முதல் தற்காலம் வரை நடந்து வருகிறது. இக்கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் அடுத்த ஆண்டே குழந்தை செல்வம் கிடைக்கும் அதிசயமும் உண்டு.
இந்த சப்த கன்னிமாருக்கு கரந்தமலை அருவியின் கரையில் உள்ள மருதமரத்திலும், குறிஞ்சி செடிகளிலும் உள்ள தேனை எடுத்து மலை உச்சியில் விளைச்சல் பெற்ற தினையைக்கொண்டு அதை மாவாக்கி தேனும் தினைமாவும் படையல் செய்யப்படும். இந்த அதிசயமும் இந்த கோவிலில் காணலாம்.
குடும்ப ஒற்றுமைக்கும், தொழில் விருத்திக்கும், எதிரிகள் அகல்வதற்கும், விவசாய பயிர்கள் நோய் இன்றி செழிப்பதற்கும் கல்வி வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு அமைவதற்கும் இப்படி பல்வேறு வேண்டுதல்களை சப்த கன்னிமார்கள் நிறைவேற்றி தருவதாக அந்த பகுதிகளில் உள்ள பக்தர்கள் அதிசயமாக தெரிவிக்கின்றனர்.
மேலும் சப்த கன்னிமார்கள் பிராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய 7 திருநாமங்களை கொண்டுள்ளது.
இந்த தெய்வங்களை வழிபடுவதால் ஆசை, கோபம், பேராசை, ஆணவம், மாயை, குற்றம், கோள் சொல்லுதல் ஆகிய தீய எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும் என்ற ஐதீக நம்பிக்கை வரலாற்றில் கூறப்படுகிறது.
இப்படி சிறப்புடைய அதிசய கரந்தமலை சப்த கன்னிமார் அம்மன் சிற்றருவியின் பாறை முகப்பில் அமர்ந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கிறார்.
நத்தத்திலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் நிறைந்த அதிசய அம்சங்களுடன் அந்த கோவில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் இந்த சப்த கன்னிமார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum