அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
Page 1 of 1
அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
புராணங்களில் கூறப்படும் ஸப்தமார்களாம் பிரம்மேஸ்வரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய இந்த 7 பேர்களே ஸப்த கன்னிகள் என்பவர்கள் ஆவார்கள். பக்தி பிரஹலாதனுக்கு பின் அந்தஹாசூரன் என்னும் அசுரனை திருமாலும், சிவபெருமானும் சேர்ந்து அழித்திட நடத்திய போரில் அந்தஹாசூரன் உடம்பிலிருந்து பெருகி மண்ணில் விழுந்த ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அந்தஹாசூரன்கள் தோன்றினர்.
அந்தஹாசூரன் உடம்பிலிருந்து ரத்தம் மண்ணில் விழுவதை தடுக்க ஸப்தமார்களாம் பிரம்மனின் சக்தி வெளிப்பாடாம் பிரம்மேஸ்வரி, மகேஸ்வரனின் சக்தி வெளிப்பாடாம் மகேஸ்வரி, திருமாலின் சக்தி வெளிப் பாடாம் வைஷ்ணவி, வராஹமூர்த்தியின் சக்தி வெளிப்பாடாம் வராஹி, முருகனின் சக்தி வெளிப்பாடாம் கவுமாரி, இந்திரனின் சக்தி வெளிப்பாடாம் இந்திராணி, இமயனின் சக்தி வெளிப்பாடாம் சாமுண்டி ஆகிய இந்த 7 பேரும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தனர் என்பது புராண காலத்து செய்தி.
அசுரன் ஒருவனை அழிக்க 7 கன்னிமார்கள் உருவானது தான் ஸப்த கன்னி என்பதாகும்.ஸப்த கன்னிகள் என்பது 7 உலகங்களையும், 7 ஸ்வரங்களையும், 7 சக்திகளையும் குறிப்பதாகும்.ஸப்த கன்னிகள் குறித்த பாடல் அருள்நூல் என்ற நூலில் பாடப்பட்டுள்ளது. ஸப்த கன்னிகள் குறித்த கவியும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
திருச்செங்கோட்டில் உள்ள ஸப்த கன்னிகள் திருக்கோயிலானது 200 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த ஸப்த கன்னிமார்களுக்கு என்றே தனிக்கோயிலானது பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் தான் உள்ளது. இந்த ஸ்ப்த கன்னிமார்களுக்கு 7 பானையில் புழுங்கல் அரிசி வைத்து சாதம் செய்து இந்த 7 பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சந்தனம், குங்குமம் இட்டு படையல் வைத்து சிலர் வணங்குகின்றனர்.
கருப்பசாமி, அய்யனார், அம்மன் கோயில்கள் எங்கெல்லாம் உள்ளதோ அந்த கோவில்களில் ஸப்த கன்னிமார்களும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் இந்த ஸப்த கன்னிமார்கள் குறித்து கூறுகையில், ஒவ்வொரு அமாவாசை அடுத்து வரும் பஞ்சமி திதி தினத்தன்று மாலை வேளையில் ஸப்த கன்னிகளுக்கு முதல் அபிஷேகத்தை ஒரு கன்னி பெண் ஒருவர் அபிஷேகம் செய்திட, பின்னர் சுமங்கலிகள் அடுத்தடுத்த அபிஷேகங்களை செய் வார்கள் என்றும், இவ்வாறு அபிஷேகம் செய்து முடித்த பின்னர் அந்தன அர்ச்சகர் கன்னிமார்களுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்வார் என்றும் தயிர்சாதத்தையே ஸப்த கன்னிமார்களுக்கு வைத்து படையலிட்டு, பிரசாதமாக வழங்கி வருகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறு ஸப்த கன்னிமார்களை வழிபடுவதன் மூலம் உலகில் தன்னை எதிர்த்து வரும் அசுர சக்திகளை, ஸப்த கன்னிகள் நம்முடன் சேர்ந்து அழித்து, நமக்கு நல்ல வழிகளை தருவதாக நம்பப்பட்டு வழிபட்டு வருகின்றனர்.
தற்போது தேனி மாவட்டத்தில் தேனி அருகே உள்ள அல்லிநகரத்தில் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் உடனாய கன்னிஹா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஸப்த கன்னிகளுக்கு கோயில் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் நடத்தி இந்த பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றனர்

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum