வாழை வடிவில் சப்த கன்னிகள்
Page 1 of 1
வாழை வடிவில் சப்த கன்னிகள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து 8-வது கி.மீ. தூரத்தில் திருப்பைஞ்ஞீலியில் ஞீலிவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக ஞீலிவனேஸ்வரரும், அம்மன் மற்றும் தாயாராக விசாலாட்சி, நீல் நெடுங்கண்நாயகி ஆகியோர் இரட்டை அம்மன்களாக வீற்றிருக்கிறார்கள். கல்வாழையை தலவிருட்சமாக கொண்ட இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பிரசித்தியும் பெற்றதாகும்.
திருமண தோஷம் உள்ளர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சப்த கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் தங்களது திருமணத்திற்கு முன்பு இந்த கோவிலுக்கு வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர்.
அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் தந்தாள். சப்த கன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். அதனை ஏற்றுக்கொண்ட அம்பாள் அங்கே எழுந்தருளினார். அவள் சப்த கன்னிகளிடம் "நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்ட காலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்'' என்றாள்.
அதன்படி சப்த கன்னிகள் இந்த கோவிலிலேயே வாழை மரங்களாக மாறி அங்கேயே தங்கினர். பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார். மேலும் இந்த கோவிலில் உள்ள விநாயகர் வசந்த விநாயகர் என்று அழைக்கப் படுகிறார்.
5 பிரகாரங்களை கொண்ட இங்கு விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என மொத்தம் 7 தீர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் உள்ள விநாயகர், சிவன் மற்றும் செந்தாமரைக்கண்ணன் என்னும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தியம்பெருமான் இருப்பதும் வித்தியாசமானதாகும்.
இங்கு சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், அப்பர் குரு பூஜை, தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இங்குள்ள சப்த கன்னி களை வேண்டி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். பங்குனி, புரட்டாசி மாதங்களில் 3 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. தொலைபேசி எண்: 0431- 2560813.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum