வாழைப்பூ அடை
Page 1 of 1
வாழைப்பூ அடை
தேவையான பொருட்கள்
ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்
அரிசி – ஒரு கப்
உளுந்து – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
வெங்காயம் – 3
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆலிங் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
• அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
• பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
• நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக ஆலிங் ஆயில் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum