கோடைக் கால கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1
கோடைக் கால கூந்தல் பராமரிப்பு
நமது கூந்தல் கறுப்பாக இருந்தாலும் அதனை பகுத்தாய்ந்து பார்த்தால் நீலம், ஊதா, பிரவுன், லைட் பிரவுன், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறக்கலப்பு தெரியும். கோடை வெயில் தொடர்ந்து கூந்தலில்பட்டால் முதலில் நீல நிறம் மறையும். அதனால் கூந்தல் செம்பட்டையாகத் தெரியும். இவ்வாறு ஆகாமல் இருக்க, கோடைகாலத்தில் `சன் புரட்டெக்ஷன்' கொண்ட எண்ணெய், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
அவைகளை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள் கோடை காலத்தில் உச்சியில் எண்ணெய் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உச்சி என்பதை நடு மண்டை என்று பலரும் நினைக்கிறார்கள். தலையின் முன் நெற்றியில் முடி தொடங்கும் இடத்தில் குறுக்காக நான்கு விரல்களை வைக்கவேண்டும். அதில் நான்காம் விரல் வைக்கப்படும் இடமே உச்சியாகும்.
குழந்தையாக இருக்கும்போது மிக மென்மையாக துடிக்கும்பகுதி போல் தெரியுமே அதுதான் உச்சி. இந்த உச்சிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால் அந்த இடத்தில் சிறிதளவு எண்ணெய் வைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். மெராக்கோ நாட்டில் பாதாம் பருப்பு போன்ற ஆர்கன் பருப்பில் இருந்து எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது கூந்தல் வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் ஏற்றது. குளிர்ச்சியும் தரும்.
இந்த ஆர்கன் ஆயிலை கோடையில் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் பெண்களை பெருவாரியாக பாதிக்கும் பிரச்சினை உடல் துர்நாற்றம். நமது உடலில் அப்போகிரைன், எக்கிரைன் என்று இரண்டு வித சுரப்பிகள் உள்ளன. முதல் வகை உடல் முழுக்க வியர்வையை உருவாக்கும். இரண்டாம் வகை, முடி இருக்கும் மறைப்பு பகுதிகளில் அதிகம் சுரக்கும்.
அங்கு சுரக்கும் வியர்வை, எண்ணெய் பசை, காற்றுபடாமை போன்றவைகளால் பாக்டீரியா படர்ந்து வளரும். அதனால் துர்நாற்றம் வீசத் தொடங்கும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு சிறிய வில்லை கற்பூரத்தை போடவேண்டும். சிறிது நேரத்தில் இது கரைந்துவிடும். அந்த தண்ணீரை பயன்படுத்தி குளித்தால் நாற்றம் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலையை போட்டுவைத்து அரை மணிநேரம் ஆன பின்பு அந்த நீரில் குளித்தாலும் நாற்றம் குறையும். ரசாயனதன்மை இல்லாத டியோடரண்ட்டையும் பயன்படுத்தலாம். குளித்த பின்பு உடலில்படும் அளவுக்கு டியோடரண்டை ஸ்பிரே செய்யவேண்டும். அது நாற்றத்தை போக்கி, மணத்தை பரப்பும்.
கோடை காலத்தில் தரமான கூலிங் கிளாஸ் கண்ணாடி, தொப்பி, குடை போன்றவைகளை பெண்கள் வெட்கப்படாமல் எடுத்துச் சென்று பயன்படுத்தவேண்டும். கறுப்பு நிறம் புற ஊதா கதிர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. அதனால் கோடையில் கறுப்பு நிற குடைகளை பயன்படுத்தாமல், கலர் குடைகளை பயன்படுத்தவேண்டும்..''

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடைக் கால சரும பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum