முடி அழகை பாதிக்கும் பேன் தொல்லை
Page 1 of 1
முடி அழகை பாதிக்கும் பேன் தொல்லை
தலையில் வசிக்கும் பேன்கள் தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு தலையில் பேன் இருந்தால் மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது.
எனவே வீட்டில் ஒருவருக்கு தலையில் பேன் இருந்தால் தற்காப்புக்காக மற்றவர்களும் இந்த எளிய மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி பேன் தொல்லையை ஒழிக்கலாம்.
• 5 கிராம் காட்டு சீரகத்தை எடுத்து சிறிது எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து தலையில் பூச வேண்டும்.
• பேன் கொட்டையை அரைத்து தலையில் தடவி வரலாம். சீதா பழக்கொட்டையை அரைத்து தலையில் தடவலாம்.
• அருகன் தைலத்தை இரவில் தூங்குவதற்கு முன்பு தலையில் தேய்த்து வந்தாலும் பேன் தொல்லை படிப்படியாக குறையும்.
• உசிலை இளைத்தூள், சீயக்காய் தூள் போன்றவற்றைக் கொண்டு தலைக்கு குளிப்பது நல்லது.
• துளசி மிகவும் சிறந்த மூலிகைப்பொருள். அத்தகைய கருந்துளசியை படுக்கும் தலையணையில் பரப்பி விட்டு அதன் மேல் ஒரு வெள்ளைத்துணியை விரித்து தூங்க வேண்டும். இதனால் தலையில் இருக்கும் பேன்கள் இந்த வாசத்திற்கு வெளியேறிவிடும்.
* தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிநது தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும. இதனால் பேன் முற்றிலும் அழிந்து விடும்,
- தலையை சுத்தமாக வைத்துக்கொண்டாலே பேன் தொல்லை வராமல் தடுக்கலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேன் தொல்லை பேன் தொல்லை
» பேன் தொல்லை ஒழிய
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை ஒழிய
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை நீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum