தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேன் தொல்லை பேன் தொல்லை

Go down

பேன் தொல்லை  பேன் தொல்லை Empty பேன் தொல்லை பேன் தொல்லை

Post  meenu Fri Mar 01, 2013 1:02 pm

பேன் ஒரு பெரும் தொல்லைதான். தலைமுடியில், அடிவயிற்றில் வசித்துக் கொண்டு மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அருவருப்பான புல்லுருவி. சமூகத்தில் பலர் முன்னிலையில் தலையை சொறிய வைக்கும் பேன், ஒரு சிறிய, இறக்கையில்லாத பூச்சி. கண்ணுக்கு சரிவர தெரியாத சிறு உருவமாக இருந்தாலும், மனித ரோமங்களையும், ஆடையையும் நன்றாக கெட்டியாக பிடித்துக் கொள்ளும் பலமுடைய கொக்கிகள் உள்ள கால்கள் கொண்டது. தட்டையான, உருவத்துடன் வறண்ட தோலும் உள்ளதால் பேனை நசுக்குவது கடினம். ரத்தத்தை உறிஞ்சுவதற்காக அமைக்கப்பட்ட வாய்கள் உடையது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுலபமாக பரவும். குறுக்காக 3 மி.மீ. அளவு இருக்கும். மனித ரத்தத்தை உறிஞ்சி வாழும்.
பேன் ஒரு தொன்மையான பூச்சி 2000 வருடமான தென் அமெரிக்க சிலி தேசத்து மம்மி தைலமிட்டு பாதுகாக்கப்பட்ட சவம் பிறப்புறுப்பு முடியில் ஈறுகள் இருந்தது. பேனால் பாதிக்கப்படுவது பெடிலோசிஸ் எனப்படும்.
பேன்களில் மூன்று வகைகள் உள்ளன
பெடிகுலஸ் இனத்தை சேர்ந்த வகைகள்
தலைப்பேன் – இது ஒரு வரை ஒருவர் தொடும்போது, ஒருவருடன் ஓருவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது, பரவும். பேனுடைய ஒருவரின் சீப்பு, ப்ரஷ் இவற்றை இன்னொருவர் உபயோகிக்கும் போதும் பரவும். பள்ளிக்குழந்தைகள் பேனை தொற்றிக் கொண்டு வருவது ஒரு பெரிய பிரச்சனை. திரும்பி திரும்பி, பேனை தொற்றிக் கொள்வார்கள். பேனோ நன்றாக கெட்டியாக மயிர்க்கால்களை பிடித்துக் கொண்டிருக்கும். பேன்களுக்கு வெளிச்சம் ஆகாது. வெளுத்த பழுப்பு நிறத்துடன், பெண் பேன்கள் 3 லிருந்து 4 மி.மி. நீளம் இருக்கும். நமக்கு நஞ்சு போன்ற திரவத்தை தந்துவிட்டு, பேன்கள் தங்கள் உடல் வெடிக்கும் அளவுக்கு, ரத்தத்தை குடிக்கும்.
சீலைப்பேன் – உடல்பேன் சுகாதார குறைவு உள்ளவர்கள், ஒரே ஆடையை அதிக நாள் அணிந்து கொள்பவர்கள் கூட்டம் கூட்டமாக, கும்பலாக வசிப்பவர்கள், இவர்களிடையே சீலைப் பேன்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை தோலில் வாழ்வதில்லை. உடைகளில் வாழ்ந்து கொண்டு, ரத்தத்தை உறிஞ்சுவதற்காக உடையை விட்டு உடலில் வரும். உடம்பில் அதிக முடி இருப்பவரிடம் சீலைப்பேன் தாக்கம் அதிகமிருக்கும். உடல் சுத்தத்துடன், உடைகளையும் துவைத்து சுத்தமாக இருந்தால் சீலைப்பேனை தவிர்க்கலாம்.
அடிவயிற்றுப் பேன் நண்டுபேன்- இவை பித்ரஸ் இனத்தை சார்ந்தவை. மற்ற இருவகை பேன்களை விட சிறியவை. உருவத்தில் நண்டு போல் அமைப்பும், கொடுக்கும் உடையதால், அடிவயிற்று முடிகளை நன்கு பற்றிக்கொள்ளும். இவற்றின் ஆயுள் காலம் 15 லிருந்து 25 நாட்கள்- இந்த ஆயுட்காலத்தில் 15-50 முட்டைகள் இருக்கும். இவற்றின் முட்டைகள் முடியின் அடியில் ஒட்டிக்கொண்டு இருக்கும். 7 நாட்களில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வரும். ஆண் பேன், பெண் பேனை விட சிறியது. இந்த பேன்கள் ஒரு நாளில் அதிக பட்சமாக 10 செ.மீ. பயணிக்கும். மற்ற இரண்டு வகைகளையும் போல, தலையில் உள்ள உணர்ச்சி நரம்புகளால், மனித உடல் வாசனை, முடிஸ்பரிசம் இவற்றை அறிந்து கொண்டு, தன் வாயை முடியின் உறையில் பதித்து தன் எடையை விட பல மடங்கு ரத்தத்தை உறிஞ்சும், ஒரே இடத்தில் பல நாட்கள் இருந்து ரத்தத்தை குடிக்கும். இவை வசிக்கும் இடங்கள் – பிறப்புறுப்பு பிரதேச முடிகள், கண் புருவம், அக்குள், தாடி, மார்பு முடிகள்.
இவை உடலுறவின் போதும், ஆடைகளில், கழிப்பிடங்களில், துவாலைகளில் உதிர்ந்திருக்கும் முடிகள் மூலம் பரவலாம்.
பேன்களால் உண்டாகும் அறிகுறிகள், பாதிப்புகள்
பேன்களால் ஏற்படும் முக்கிய தொல்லை- அரிப்பு, தலைப்பேனால், தலையில் குறிப்பாக பக்கவாட்டில், பின் தலையில் நமைச்சல் ஏற்படும். சொறிந்து, சொறிந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் புண்ணாகி, நீர்க் கசிந்து, சுலபமாக பாக்டீரியாதாக்குதலுக்கு ஆளாகும். தலைமுடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, நீண்ட காலம், தபம் செய்யும் முனிவர் போல தலைமுடி ஆகிவிடும். அழுக்கும் சேர்ந்து கொள்ளும். துர்நாற்றமும் ஏற்படலாம்.
சீலைப்பேன் குறிப்பாக, தோள் பட்டை, மார்பு, இவற்றை கடிக்கும் தோல் சிவந்து நமைச்சல் உண்டாகும். பாக்டீரியா, தொற்றும் ஏற்படும்.
அடிவயிற்றுப்பேனால் பிறப்புறுப்பு பகுதிகளில் தீவிர அரிப்பு ஏற்படும். தோல் சிவந்து எரித்தீமா ஏற்படலாம்.
பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும்.
பேன்களால் முடி பாதிக்கப்பட்டு உதிரும்.
பேன்களை ஒழிக்க
துளசி இலைகளை, அதுவும் கருந்துளசி இலைகளை தலையணையின் அடியில் பரப்பவும். தலையணையின் உறை வெள்ளை நிறமாக, மெலிந்த துணியாக இருந்தால் நல்லது. இந்த தலையணையில் தலை வைத்து, சில நாட்கள் படுக்க, பேன் மறையும். இதே போல் மருதாணி பூவை இரவில் தலைக்கு வைத்துக் கொண்டால் பேன்களை தவிர்க்கலாம்.
ஓமவல்லி இலை, வசம்புப்பொடி, மிளகு இவற்றை அரைத்து மோரில் கலந்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை அகலும். வெறும் வசம்பின் விழுதையும் தலையில் தேய்த்து, அரைமணி கழித்து தலையை அலசினால் பேன்கள் மறையும்.
சிறிது வறுத்த வேம்பம் பூக்களையும் தலையில் வைத்துக்கட்டலாம்.
வெள்ளை மிளகை பாலில் ஊற வைத்து அரைத்து, தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நிரில் அலசினால் பேன்கள் மறையும்.
கசப்பு பாதம் பருப்புகளை அரைத்து, விழுதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசலாம். பாதாம் பருப்புகளுக்கு பதில், சீதாப்பழ விதைகளையும் பயன்படுத்தலாம். சீதாப்பழ விழுது கண்களில் படக்கூடாது.
பேன்கள், ஈறுகளை அழிக்க பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றை ஒரு முறை உபயோகித்தால் போதாது. முழு நிவாரணத்திற்கு அவைகளை மறுபடியும் உபயோகிக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
தலையை நன்றாக தினமும் வார வேண்டும். பேன்களை ஒழித்தாலும், ஈறுகளை அழிப்பது கடினம். எனவே ப்ரத்யேக பேன், ஈறு, சீப்பினால் தலை வாரவும்.
பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள், துவாலைகள் இவற்றை உதளி, சுத்தம் செய்ய வேண்டும்.
கூந்தலை அழுக்கு, பிசுக்கின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
துளசியை நன்றாக விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து ஊறவும். பிறகு வெது வெதுப்பான நீரில் அலசவும். பேன்கள் மடிந்து மறையும்.
பேனின் உடலமைப்பு
சிறிய உடலுள்ள பூச்சியானாலும் பேனின் உடலமைப்பு, மனித உடலின் முடியை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும், ரத்தத்தை உறிஞ்சவும் ஏற்றதாக அமைந்துள்ளது. பக்கத்திற்கு மூன்று கால்கள் வீதம் மொத்தம் ஆறு கால்களை கொண்டது. கால்களின் நுனியில் வளைந்த நகக்கொக்கிகள் இருக்கும். இதனால் கெட்டியாக முடியை பிடித்துக்கொண்டு, முடிஉறையிலிருந்து போஷாக்கை பெற்றுக்கொண்டு வளரும். தலையில், ரத்தத்தை, உறிஞ்ச, தும்பிக்கை போன்ற அவயம் இருக்கும்.
சுத்தமான தலையில் பேன்கள் இருக்காது. காய்ச்சல், அதிக உழைப்பு இவற்றால் உண்டாகும் வெப்பத்தினால் பேன்கள் ஓடிவிடும்.
வயது வந்த பெண் பேன் தினம் 3-5 பளபளப்பான முட்டைகளை இடும். இந்த முட்டைகளை முடிக்கால்களுக்கு அருகில், முடியின் தண்டில் இடும். எட்டு நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். 2-3 வாரங்களில் வயதுக்கு வந்த பேனாக ஆகிறது. பேனின் ஆயுள் ஒரு மாதம். ஈறுகள், பேன் குஞ்சுகள் வளர்ந்த பேனை விட மயிர்க்கால்கள் கெட்டியாக பற்றிக் கொள்வதால், இவற்றை எடுக்க, ஷாம்பு போதாது. வாரி எடுக்க பிரத்யேக பேன் சீப்புகள் தேவை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum