தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழைப்பூ அடை

Go down

வாழைப்பூ அடை                        Empty வாழைப்பூ அடை

Post  ishwarya Fri Mar 15, 2013 11:52 am


தேவையான பொருட்கள்:-

ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ– ஒரு கப்.
அரிசி– ஒரு கப்.
உளுந்து– கால் கப்.
கடலைப்பருப்பு– கால் கப்.
வெங்காயம்– 3.
கடுகு– கால் டீஸ்பூன்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி– சிறிதளவு.
பச்சை மிளகாய்– 3.
தேங்காய் துருவல்– 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு– தேவையான அளவு
ஆலிங் ஆயில்- தேவையான அளவு

செய்முறை:-

* அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

* பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.

• நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக ஆலிங் ஆயில் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum