தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே

Go down

விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே  Empty விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே

Post  ishwarya Mon May 27, 2013 6:06 pm

பிரபல இந்தி நடிகையான தீபிகா படுகோனே, பேட்மிண்டன் முன்னாள் வீரர் பிரகாஷ் படுகோனேயின் மகள் ஆவார். தீபிகா படுகோனே நடித்து உள்ள 'ஏக் ஜவானி ஹெய்ன் தீவானி' என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவரது முன்னாள் காதலர் ரன்பீருடன் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற 31ம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இதையட்டி, படத்தை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சி பெங்களூரில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகை தீபிகா படுகோனே சென்றிருந்தார். அவரிடம், சமீபத்தில் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் நடிகர் விண்டூ ரந்தவா கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த தீபிகா படுகோனே, சூதாட்டம் எந்தவொரு விளையாட்டு என்றாலும் அதற்கு கெட்ட பெயரை கொண்டு வந்து விடும். அதுமட்டுமின்றி சூதாட்டத்தில் சம்பந்தம் இல்லாதவர்களையும் அதில் சிக்க வைத்துவிடும்.

விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையின் மூலம் நாட்டுக்கு சந்தோஷம், உற்சாகம், பெருமையை கொண்டு வர முடியும். ஆனால், இது விடயத்தில் சூதாட்டம் அவர்களுக்கு உதவியாக அமையாது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum