தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Top 100 இந்திய செலிபிரிட்டிக்களில் ஷாரூக்கானுக்கு முதலிடம்!

Go down

Top 100 இந்திய செலிபிரிட்டிக்களில் ஷாரூக்கானுக்கு முதலிடம்! Empty Top 100 இந்திய செலிபிரிட்டிக்களில் ஷாரூக்கானுக்கு முதலிடம்!

Post  ishwarya Mon May 27, 2013 5:53 pm

இந்தியாவின் Top 100 செலிபிரிட்டி பட்டியலில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ஒரு படத்தின் சம்பளமாக 200 கோடி பெறுகிறாராம். கடந்த வருடம் அவரது மொத்த வருமானம், 37.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.

சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், தொலைகாட்சி பிரபலங்கள் பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், மாடலிங் துறை பிரபலங்கள் மற்றும் காமெடி நடிகர்கள் என எட்டு துறைகளில் உள்ள பிரபலங்களை (Celebrities) கொண்டு அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் சஞ்சிகை இப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்நபர்களின் வருட வருமானம், அவர்களது பிரபலம் என்பவற்றை கருத்தில் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் நடிகர் ஷாரூக்கான் முதலிடத்தையும், நடிகர் சல்மான் கான் இரண்டாம் இடத்தையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். புகழ், பிரபலம் என்பவற்றை பார்த்தால் ஷாருக்கானை விட, சல்மான் கான், தோனி ஆகியோரே முன்னிலை பெறுவர். எனினும் ஷாருக்கானின் விளம்பர, திரைப்பட வருமானம் அவர்களது வருமானத்தை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பட்டியலில் அக்ஷய் குமார் நான்காவது இடத்திலும், அமிதாப் பச்சன் ஐந்தாம் இடத்திலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் ஆறாவது இடத்திலு உள்ளனர். 7வது இடத்தை கரீனா கபூர் பிடித்துள்ளார். இவரே இப்பட்டியலில் முன்னிலையில் உள்ள பெண் ஆவார். கேத்ரீனா கைப், சாய்நா நேவால், சானியா மிர்சா ஆகியோரும் Top 50 பட்டியலில் உள்ளனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum