ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை!
Page 1 of 1
ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை!
மும்பை வான்கடே மைதானத்தில் மது அருந்திவிட்டு அங்குள்ள அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட நடிகர் ஷாரூக்கானை, இந்த மைதானத்திற்குள் நுழைய வாழ்நாள் தடை விதித்து இருக்கிறது மும்பை கிரிக்கெட் வாரியம். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். இவர் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். தற்போது ஐ.பி.எல் சீசன் 5 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் ஐ.பி.எல்., போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் கோல்கட்டா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் கோல்காட்டா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும் பங்கேற்று தனது அணியின் வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். நேற்றைய போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது.
கோல்கட்டா அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்திற்குள் ஷாரூக் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். ஆனால் அவரை உள்ளே விட அதிகாரிகள் மறுத்தனர். இதனையடுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டியின் போது ஷாரூக் மது அருந்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மும்பை கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறிலும், அவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மைதான அதிகாரிகள் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வாழ்நாள் முழுக்க மும்பை வான்கடே மைதானத்திற்குள் ஷாரூக் கான் நுழையக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது மும்பை கிரிக்கெட் வாரியம்.
ஏற்கனவே இந்த ஐ.பி.எல்., சீசனில் மைதானத்தில் புகை பிடித்ததாக ஷாரூக் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
» Top 100 இந்திய செலிபிரிட்டிக்களில் ஷாரூக்கானுக்கு முதலிடம்!
» ஷாரூக்கானுக்கு 5 ஆண்டு நுழைய தடை!
» ஷாரூக்கானுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகர் விருது!
» ஷாரூக்கானுக்கு நிலவில் நிலம் வாங்கிய ரசிகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum