ஷாரூக்கானுக்கு 5 ஆண்டு நுழைய தடை!
Page 1 of 1
ஷாரூக்கானுக்கு 5 ஆண்டு நுழைய தடை!
குடிபோதையில் ரகளை செய்த கோல்கட்டா அணியின் உரிமையாளர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு, மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய, 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டி முடிவில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான், மைதானத்துக்கு செல்ல முயன்றார். அப்போது பாதுகாவலர்கள் தடுத்ததால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பாதுகாவலர்களை ஷாருக்கான் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஷாரூக்கான் தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். என் குழந்தையை தாக்க முயன்றனர். அதனால் தான் அப்படி நடக்க நேர்ந்தது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்க போவதில்லை. அவர்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, நேற்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ.,) நிர்வாக கமிட்டி அவசரமாக கூடியது. கூட்டத்தின் முடிவில் எம்.சி.ஏ., தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியது: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), ஐ.பி.எல்., அதிகாரிகள் என, பலர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் முன்னிலையில், மும்பை மைதான நிர்வாகிகளை ஆத்திரமூட்டும் வகையில் பேசிய ஷாருக்கானுக்கு எம்.சி.ஏ., கண்டனம் தெரிவிக்கிறது. எவ்வித அங்கீகாரமும் இல்லாமல், ஷாருக்கான் எப்படி மைதானத்துக்குள் செல்ல முடியும். பரிசளிப்பு விழாவில் எனக்கு அழைப்பு இல்லை என்றால், நான் கூட செல்ல மாட்டேன். இது தான் விதி. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. நியாயப்படுத்தி பேசுகிறார். இதையடுத்து நிர்வாக கமிட்டி சார்பில், வான்கடே மைதானத்துக்குள் ஷாருக்கான் நுழைய ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. எம்.சி.ஏ., சுதந்திரமான அமைப்பு. வான்கடே மைதானம் எம்.சி.ஏ.,க்கு சொந்தமானது. எங்கள் சங்கத்தின் கண்ணியம் காக்க இந்த முடிவை எடுத்துள்ளோம். இதற்கான தகுதி எங்களுக்கு உள்ளது. என்ன நடந்தது என்பதை பி.சி.சி.ஐ.,க்கு முறைப்படி தெரிவிப்போம். அவர்கள் முடிவை மாற்றினால், நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை!
» ஷாரூக்கானுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகர் விருது!
» ஷாரூக்கானுக்கு நிலவில் நிலம் வாங்கிய ரசிகை!
» 'மிட்நைட்ஸ் சில்ரன்' படவிழா: கொல்கத்தாவில் நுழைய சல்மான் ருஷ்டிக்கு தடை
» ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum