தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்

Go down

ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின் Empty ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்

Post  ishwarya Fri Apr 19, 2013 1:25 pm

தமிழில் இருந்து இந்திக்கு போன நடிகை அசினுக்கு இப்போது அதிர்ஷடம் அடித்திருக்கிறது. தற்போது சல்மானுடன் ரெடி படத்தில் நடித்து வரும் அசின், அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் ஜோடி சேர இருக்கிறார்.

தமிழில் நம்பர்-1 நடிகையாக இருந்த அசின் கஜினி படத்தின் மூலம் இந்திக்கு போனார். முதல்படத்திலேயே அமீர்கானுடன் ஜோடி போட்டு நடித்தார். இதனையடுத்து இந்தியில் அசினுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. கஜினியை தொடர்ந்து சல்மான் கானுடன் “லண்டன் ட்ரீம்ஸ்” படத்தில் நடித்தார். ஆனால் இந்தபடம் சரியாக போகிவில்லை. இதனையடுத்து “காவலன்” படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இந்த படம் நன்றாக போனாலும், அசினுக்கு தமிழில் முன்பு இருந்த வரவேற்பு இப்போது கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கானுடன் “ரெடி” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அசினுக்கு இந்தியில் அதிர்ஷடம் அடித்து இருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழ் பெண்ணை மணக்கும் இந்திகாரர் வீட்டில் ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி வெளிவந்த ஒரு நாவலின் கதையை மையப்படுத்தி இந்தியில் ஒரு படம் தயாராக இருக்கிறது. இதில் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்திற்கு முதலில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் ஷாரூக்கும் ப்ரியங்க வேண்டாம் அவருக்கு பதிலாக வேறுயாராவது ஒரு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியபோது, அசினை நடிக்க வைக்க சிபாரிசு செய்து இருக்கிறார் ஷாரூக்கான். படத்தில் அசின் தமிழ் பெண்ணாக நடிக்கிறார். இதனிடையே ஷாரூக்கானுடன் நடிக்க இருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் அசின்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum