புலிகள் சரணாலய வனப்பகுதியில் நடிகர் சூர்யா தங்கியதற்கு வலுப்பெறும் எதிர்ப்பு!
Page 1 of 1

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில், நடிகர் சூர்யா சட்டவிரோதமாக இரவில் தங்கியிருந்துள்ளதாக கேரள வன ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த ஜன. 25 ஆம் திகதி தேக்கடியில் நடந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த நடிகர் சூர்யா அன்று இரவு பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியான முல்லைகொடி என்கிற வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கியிருந்துள்ளார். இதற்கே கேரள வன ஆர்வலர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், "பெரியாறு புலிகள் வனப்பகுத்திக்கு மாலை 6 மணிக்குமேல் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ் குமார், இரவு 8 மணிக்கு மேல், தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்கிற இடத்துக்கு சென்றார். எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனே திருப்பி அனுப்பபட்டார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா இரவு 8 மணிக்கு மேல், 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்கு சென்று தங்கியுள்ளார். அவரை குறித்த சில வனத்துறையினர் வனத்துறை ஜீப்பில் அழைத்து சென்று, வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்க வைத்திருந்துள்ளது வியப்பளிக்கிறது. ஆபத்தான பகுதி என்பதால், தடை செய்யப்பட்டிருந்த குறித்த பிரதேசத்திற்குள் நடிகர் சூர்யா சென்றது ஏன் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நடிகர் சூர்யா தங்கியிருந்த அந்த இடம், வன விலங்குகள் அதிகம் நடமாட்டமுள்ள ஒரு பகுதியாகும். எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கம்-2 படப்பிடிப்பு: புலிகள் நடமாடும் பகுதியில் இரவில் தங்கிய சூர்யா

» மலேசியா போகாத சூர்யா, ரத்த சரித்திரம் சிறப்புக் காட்சி ரத்து… ஈழத் தமிழர் எதிர்ப்பு காரணமா?
» சின்னத்திரை கேம் ஷோவில் நடிகர் சூர்யா
» கலப்பு திருமண மோதலை சித்தரிக்கும் கதை: நடிகர் பிரகாஷ்ராஜ் படத்துக்கு எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum