கலப்பு திருமண மோதலை சித்தரிக்கும் கதை: நடிகர் பிரகாஷ்ராஜ் படத்துக்கு எதிர்ப்பு
Page 1 of 1

பிரகாஷ்ராஜ் `கௌரவம்' என்ற படத்தை தயாரிக்கிறார். `மொழி' படம் மூலம் பிரபலமான ராதாமோகன் இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நாயகனாகவும், யமிகுப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தர்மபுரியில் சமீபத்தில் நடந்த கலப்பு திருமண மோதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணி கண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள `கௌரவம்' படத்தின் டிரைலர் காட்சிகளை பார்த்தோம். இதில் 60-க்கும் மேற்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணத்தால் கௌரவ கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றும் சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும், வன் முறைகளை தூண்டி விடும் வகையிலும் காட்சிகள் உள்ளன.
தீண்டாமையை ஏற்க மாட்டோம். எல்லா சமுதாயமும் அடிப்படை வசதி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இந்த படம் சாதி மதங்களிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும். எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இளையராஜாவை அவமதிப்பதா.. எஸ்ஜே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பிரகாஷ்ராஜ்!
» நடிகர் பிரகாஷ்ராஜ் – சிறப்பு பேட்டி
» நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்
» ஆதிபகவன் படத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு
» பாதிரியார் வேடத்தில் கைதிகள்: மலையாள படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum