தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் அஜ்மலுடன் ராதிகா ஆப்தே மோதல்

Go down

படப்பிடிப்பில் அஜ்மலுடன் ராதிகா ஆப்தே மோதல் Empty படப்பிடிப்பில் அஜ்மலுடன் ராதிகா ஆப்தே மோதல்

Post  ishwarya Sat May 25, 2013 2:56 pm

சினிமா படப்பிடிப்பின் போது கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையே மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூகத்தில் யாராலும் கண்டு கொள்ளப்படாத சில மனிதர்களின் உணர்வுகளை கருவாக வைத்து, வெற்றிச்செல்வன் என்ற படம் தயாராகி வருகிறது.

இயக்குனர் ருத்ரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜ்மல் நாயகனாகவும், நடிகை ராதிகா ஆப்தே நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

அஜ்மல் கேரளாவை சேர்ந்தவர். ராதிகா ஆப்தே மும்பையை சேர்ந்தவர். இருவருக்கும் இடையே மொழி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒத்திகையின் போது ஒரு மாதிரியாகவும், டேக்கின் போது வேறு மாதிரியாகவும் அஜ்மல் நடித்ததாக கூறப்படுகிறது.

இது ராதிகா ஆப்தேவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், பொறுமை இழந்த அவர், உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று அஜ்மலைப் பார்த்து ஆவேசமாக கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதமும், மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவானதால் படப்பிடிப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

பின்பு இயக்குனர் ருத்ரன் குறுக்கிட்டு, இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆன பின்பு படப்பிடிப்பு தொடர்ந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum