தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படாதிபதிகளை மிரட்டும் கருணாஸ்.

Go down

படாதிபதிகளை மிரட்டும் கருணாஸ். Empty படாதிபதிகளை மிரட்டும் கருணாஸ்.

Post  ishwarya Sat May 25, 2013 1:57 pm

கொலிவுட்டில் சந்தமாமா படத்தில் நடித்த கருணாஸ், நடிப்பிற்கு சம்பளமாக 75 லட்சம் கேட்டு படாதிபதிகளை மிரட்டி வருகிறார். நகைச்சுவை பட்டியலில் பின்தங்கி இருந்த கருணாஸ், திடீரென்று கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டு இவர் நடித்த இரண்டு படங்களும் சரியாக அமையவில்லை.

இதன் விளைவு ஒரே நேரத்தில் மூன்று, நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதோடு, நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் அமையவில்லை. அப்படி கிடைத்தால் வருடத்துக்கு 10 படங்களில் கூட கதாநாயகனாக நடிப்பேன் என்றும் செம பில்டப் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது நடிப்பில் தற்போது சந்தமாமா என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படம் பெரிதாக ஒன்றும் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் முகத்தில் எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், தில்லாக காலரை தூக்கி விட்டபடியே நடந்து வருகிறார் கருணாஸ்.

ஆனால், இந்த படத்தின் தோல்வியால் அவரது சம்பளத்தை கணிசமான அளவு குறைத்திருப்பார் என்று கருதிய, சில பட்ஜெட் பட கம்பெனிகள் அவரை தொடர்பு கொண்டன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவர்களிடம் 75 லட்சம் சம்பளம் வேண்டும் என்றும் இதில் கொஞ்சம் குறைந்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் ஒப்பந்தம் செய்ய சென்ற படாதிபதிகள் விழுந்தடித்து ஓடி வந்து விட்டார்களாம். அதோடு, கருணாசுக்காக கதை ரெடியாக வைத்திருந்த சில இயக்குனர்கள் தற்போது சந்தானம், சத்யன் என்று செல்லத் தொடங்கிவிட்டனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum