தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி அதிகம் பேசாமல் அடக்கிவாசிக்கப்போகிறேன்- பிரேம்ஜி

Go down

இனி அதிகம் பேசாமல் அடக்கிவாசிக்கப்போகிறேன்- பிரேம்ஜி Empty இனி அதிகம் பேசாமல் அடக்கிவாசிக்கப்போகிறேன்- பிரேம்ஜி

Post  ishwarya Sat May 25, 2013 12:33 pm

அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்திலிருந்து நடிக்கத் தொடங்கியவர் பிரேம்ஜி. அதன்பிறகு அவர் எந்த படத்தில் நடித்தாலும் லொடலொடவென்று எதையாச்சும் பேசிக்கொண்டேயிருப்பார். அதுவும் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் பிரேம்ஜியின் டார்ச்சர் தாங்க முடியாது. இந்நிலையில், சமீபத்தில் வினய் நடித்த ஒன்பதுல குரு படத்திலும் காமெடி என்ற பெயரில் செம கடி கடித்து எடுத்தார். இதனால் காமெடி என்ற பெயரில் இவர் செய்து வந்த அக்கப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரை அழைத்து ஒரு வேடம் கொடுத்த சந்தானம், சேட்டை படத்திலும் பிரேம்ஜியை அழைத்து ஒரு வேடம் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் நானும், ஆர்யாவும் நடிக்கிறோம். கூடவே இன்னொரு வேடமும் தேவைப்படுகிறது. உங்களால் முடியுமா? என்று கேட்டபோது, என்ன சார் அப்படி சொல்லிட்டீங்க. நானே உங்ககிட்ட சான்ஸ் கேட்கனும்னு காத்துக்கிட்டிருந்தேன். கும்பிட போன தெய்வமே குறுக்க வந்த மாதிரி நீங்களே கூப்பிட்டு சான்ஸ் கொடுத்துட்டீங்க என்று வாயாடியிருக்கிறார். அதைக்கேட்ட சந்தானம், வாயாடுவது உங்கள் சுபாவமாக இருக்கலாம். ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை அதையெல்லாம் கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் ஒரு புதுமையான பிரேம்ஜியாக வெளிப்படுவீர்கள் என்று சொன்னாராம். அதையடுத்து, காமெடி பஞ்ச் எதுவும் விடாமல், அடக்க ஒடுக்கமாக நடித்தாராம் பிரேம்ஜி.

படத்தை முடித்து பார்த்தபோது, இதுவரை பார்க்காத பிரேம்ஜியை திரையில் பார்த்தாராம் பிரேம்ஜி. அதனால், இனிமேல் எந்த படமாக இருந்தாலும் அதிகமாக பேசாமல் அடக்கிவாசிக்க முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார் அவர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum