தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிர்ச்சி தரும் அஞ்சலின் பிளாஷ்பேக் கதை.

Go down

அதிர்ச்சி தரும் அஞ்சலின் பிளாஷ்பேக் கதை. Empty அதிர்ச்சி தரும் அஞ்சலின் பிளாஷ்பேக் கதை.

Post  ishwarya Sat May 25, 2013 11:52 am


இதுவரை அஞ்சலி நடித்த படங்களைவிட திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த த்‌ரில்லராக அஞ்சலியின் வாழ்க்கை கடந்த சில தினங்களாக மாறியிருக்கிறது. இரண்டு தினங்கள் முன்பு, ஹைதராபாத்தில் இருந்தபடி, என் உயிருக்கு ஆபத்து என அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டார் அஞ்சலி. தனது சித்தி பாரதி தேவியும், இயக்குனர் மு.களஞ்சியமும் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், அவர்கள் விருப்பப்படி நடக்க நிர்பந்திப்பதாகவும், தனது கோடிக்கணக்கான பணத்தை இருவரும் சுருட்டிவிட்டதாகவும் அதிர்ச்சிகளாக அடுக்கினார்.

திரையுலகினருக்கு - குறிப்பாக அஞ்சலியை அறிந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சி. அஞ்சலியின் நிழலாக எப்போதும் அவருடன் இருக்கும் பாரதி தேவியை அஞ்சலியின் அம்மா என்றே பலரும் நினைத்திருந்தனர். அவர் அஞ்சலியின் அம்மா இல்லை என்று அறிய நேர்ந்ததும், பாரதி தேவி குறித்த அஞ்சலியின் குற்றச்சாற்றுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது.

இந்நிலையில், அஞ்சலியின் குற்றச்சாற்றுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெ‌ரிவித்த மு.களஞ்சியம், அஞ்சலி தன் மீதான குற்றச்சாற்றை வாபஸ் பெறாவிட்டால், அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என அறிவித்தார். கமிஷனர் அலுவலகத்திலும் அஞ்சலி மீது புகார் தெ‌ரிவித்திருக்கிறார்.

அஞ்சலி எப்படி சித்தியின் அடைக்கலத்துக்கு வந்தார்? அவருக்கும் மு.களஞ்சியத்துக்கும் என்ன தொடர்பு...?

இதற்கான விடைகள் அதிர்ச்சி தரக்கூடியவை.

அஞ்சலியின் தாயார் பார்வதி தேவி. அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் (அஞ்சலி) குழந்தை. ஆந்திரா ஜெகன்பேட்டையில் வசித்து வந்த நேரம் அஞ்சலியின் தந்தை அவர்களைவிட்டு பி‌ரிந்திருக்கிறார். ஆந்திராவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அஞ்சலி அப்படிதான் சென்னையில் உள்ள பார்வதி தேவியின் தங்கை பாரதி தேவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்.

பார்வதி தேவியின் முயற்சியால் மு.களஞ்சியத்தின் சத்தமில்லாமல் முத்தமிடு படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் பண நெருக்கடியால் வெளிவரவில்லை. அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் என சுற்றித் தி‌ரிந்து ராமின் கற்றது தமிழில் தமிழ் அறிமுகம். அங்காடித்தெரு அஞ்சலியை கவனிக்கத்தக்க நடிகையாக்கியது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கேரவேனுக்குள் அழுதேன்…விதார்த்தின் கொடூர பிளாஷ்பேக்
» நான்… கவுண்டமணி… வாழைப்பழம்! – சிரிப்பு செந்தில் சொல்லும் பிளாஷ்பேக்!
» அப்போது எதிரி, இப்போது நண்பன்… அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக் – கைமாறிய பதினைந்து கோடி?
» பஹத்பாசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆண்ட்ரியா!
» கமலஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum