கேரவேனுக்குள் அழுதேன்…விதார்த்தின் கொடூர பிளாஷ்பேக்
Page 1 of 1

தொட்டுப்பார், மைனா, முதல் இடம். மூன்றே படங்கள்தான். விதார்த்தின் கவுரவம் கோடம்பாக்கத்தில் இப்போது கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் முதல் இடம் திரைப்படம் ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட விதார்த், ஃபிளாஷ்பேக்குக்கு போன போது ரெண்டு சொட்டு கண்ணீர் விடாத குறை.
இவரது தாத்தா பராசக்தி, ஓர் இரவு ஆகிய படங்களில் துண்டு துக்கடா வேடத்தில் நடித்தவராம். இரண்டுமே ஏவிம் தயாரித்த படங்கள். ஆனால் அவரது பேரனான நான், அதே நிறுவனம் தயாரித்த படத்தில் ஹீரோ. அதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்கிறது என்றார். (படத்தை தாத்தாவுக்கு டெடிகேட் பண்ணிடுங்கோ)
முதல் இடம் பார்ப்பவர்கள் விதார்த் சில காட்சிகளில் கால் தாங்கி தாங்கி நடப்பதை கவனித்திருப்பீர்கள். அது வேறொன்றுமில்லை. படப்பிடிப்பு சமயத்தில் இவரது காலில் பலத்த அடி விழுந்தது. காலில் எலும்பு முறிந்தது. ஆறு மாதம் பெட் ரெஸ்ட் இருக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிவிட்டார்களாம் மருத்துவர்கள்.
நம்மை நம்பி பணம் போட்ட நிறுவனம், முதல் பட கனவோடு வந்திருக்கும் இயக்குனர் இவர்கள் காயப்படக் கூடாது என்பதற்காகவே வலியை பொறுத்துக் கொண்டு நடித்தாராம் விதார்த். சில நாட்கள் வெளியே சிரித்துக் கொண்டே நடிப்பேன். ஷாட் முடிந்ததும் கேரவேனுக்குள் சென்று ஓ என்று அழுவேன். அந்த வலியை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு என்றார் விதார்த்.
உதவி இயக்குனர்களிடம் கதை கேட்பதற்கு பிகு பண்ணிக்கிறீங்களாமே என்ற இன்னொரு கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்தார் விதார்த். இப்பவும் ஹோட்டலுக்கு வாங்க, கதை கேட்கிறேன் என்று சொல்கிற நடிகர்களுக்கு மத்தியில் வீட்டுக்கு வாங்க என்று அவர்களை அழைத்து சாப்பிட சொல்லி அப்புறம்தான் கதை கேட்கிறேன் நான். நீங்கள் கேள்விப்பட்டது அத்தனையும் பொய் என்றார்.
நம்புறோம் தலைவா…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» த்ரிஷா, தமன்னாவுடன்…! விதார்த்தின் ஆசை!!
» அதிர்ச்சி தரும் அஞ்சலின் பிளாஷ்பேக் கதை.
» நான்… கவுண்டமணி… வாழைப்பழம்! – சிரிப்பு செந்தில் சொல்லும் பிளாஷ்பேக்!
» மருமகளின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூர மாமியார்!
» 13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர வளர்ப்புத் தந்தை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum