தில்லு முல்லு படத்துக்காக எம்.எஸ்.வியுடன் யுவன் சங்கர் ராஜா டான்ஸ்.
Page 1 of 1

வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ். மதன் தயாரிக்கும் படம், ‘தில்லு முல்லு’. பழைய ‘தில்லு முல்லு’ படத்தின் ரீமேக். சிவா, இஷா தல்வார் ஜோடி. எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பத்ரி இயக்குகிறார். இந்தப் படத்துக்காக ‘தில்லு முல்லு தில்லு முல்லு’ என்று தொடங்கும் பாடல் காட்சி நேற்று படமானது. அதில் எம்.எஸ்.வியுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா ஆடினார்.
பின்னர் நிருபர்களிடம் யுவன் சங்கர் ராஜா கூறியதாவது: என் தந்தை இளையராஜா எம்.எஸ்.வியுடன் இணைந்து நான்கு படங்களுக்கு இசை அமைத்தார். முதன் முறையாக இந்தப் படத்துக்கு அவருடன் நான் இசை அமைப்பதை பெருமையாக நினைக்கிறேன். இப்படம் 1981,ல் வெளியானது. 32 ஆண்டுகளுக்கு பிறகு பழைய ‘தில்லுமுல்லு’வில் இடம்பெற்ற ‘தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளம் எல்லாம் கல்லு முள்ளு’ என்ற பாடலை, வரிகள் மாற்றாமல் இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப ஹிப் ஹாப்பில் ரீமேக் செய்து இசை அமைத்துள்ளேன்.
இப்பாடலை எம்.எஸ்.வியுடன் இணைந்து நானும் பாடியுள்ளேன். அவருடன் ஆடியுள்ளேன். மேலும் எம்.எஸ்.வி இசையில் உருவான ‘ராகங்கள் பதினாறு’ பாடலை அபப்டியே இடம்பெற செய்துள்ளோம். நான் தனி ஹீரோவாக நடிக்கும் படம் பற்றி விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு யுவன் சங்கர் ராஜா கூறினார். எம்.எஸ்.வி, இயக்குனர் பத்ரி, தயாரிப்பாளர் டி.சிவா உடன் இருந்தனர். முன்னதாக தனது ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.வியையும் யுவன் சங்கர் ராஜாவையும் பாலுமகேந்திரா வரவேற்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யுவன், எம்.எஸ்.வி. - ஒரு தில்லு முல்லு கூட்டணி

» தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம்
» யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?
» தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum