தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம்

Go down

தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம் Empty தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம்

Post  ishwarya Sat May 04, 2013 2:26 pm


ரஜினி நடித்து 1981-ல் ரிலீசான ‘தில்லுமுல்லு’ படம் சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார். வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.

பழைய தில்லு முல்லு படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய தில்லுமுல்லு, தில்லுமுல்லு பாடலை ரீமேக் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் பாடினார். அதை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் ஆக்கி நவீனப்படுத்தினார்.

இந்த பாடலை ஆல்பம் போல் உருவாக்குகின்றனர். இருவரும் சேர்ந்து இசையமைப்பதுபோல் இந்த ரீமிக்ஸ் பாடல் ஆல்பத்தில் சேர்ந்து நடனமாடவும் செய்கிறார்கள். இந்த நடன காட்சி சாலி கிராமத்தில் உள்ள பாலு மகேந்திரா ஸ்டூடியோவில் படமானது.

எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன் சங்கர்ராஜாவும் கைகோர்த்து ஆட அவர்களுடன் நிறைய துணை நடிகைகளும் ஆடினார்கள். அப்பெண்களுடன் இருவரும் காரில் பவனி வருவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

தில்லுமுல்லு பாடல் வீடியோ ஆல்பத்தில் நடித்தது குறித்து யுவன் சங்கர் ராஜா கூறும் போது, எனது தந்தையும் எம்.எஸ். விஸ்வநாதனும் இணைந்து மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு உள்பட நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளனர். நானும் அவருடன் இணைந்து இசையமைப்பது பெருமை. தில்லுமுல்லு மற்றும் ராகங்கள் பதினாறு பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளோம் என்றார்.

இந்த பாடல் ஆல்பத்தை படம் ரிலீசுக்கு முன் வெளியிடுகின்றனர். எம்.எஸ்.விஸ்வநாதனுடன் உள்நாட்டு வெளிநாட்டு நடன கலைஞர்கள் ஆடிபாடி நடித்த காட்சிகளை ஒளிப்பதிவாளர் சரவணன் படமாக்கினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum