கடலில் பலத்த சூறைக்காற்று நாகை, தஞ்சை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Page 1 of 1

கடலில் வைகாசி விசாக காற்று எனப்படும் பலத்த சூறைக்காற்று வீசுவதால்
நாகை, தஞ்சை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை, வேதாரண்யம் கடற்கரை
பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் வைகாசி விசாக காற்று எனப்படும்
சூறாவளிக்காற்று பலமாக வீசுகிறது. இதனால் கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக
ஆக்ரோஷமாக எழும்புகிறது. நேற்று அதிகாலையிலும் காற்றின் வேகம் அதிகமாக
இருந்தது. இதனால் பைபர் படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
மாவட்டம் முழுவதும் 2,500 பைபர் படகுகள் கரைகளில் பாதுகாப்புடன் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் தொழில்
பாதிக்கப்பட்டுள்ளது.காற்று காரணமாக வேதாரண்யம் அருகே கடினல்வயல்
பஞ்சாயத்து சக்கரம்பேட்டை கிராமத்தில் நேற்று கடல் நீர் அங்குள்ள
வாய்க்காலில் புகுந்தது. நிலத்தடி நீர் பாதிக்கும் என்பதால் வேதாரண்யம்
தாசில்தார் ராம்குமார் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுமக்கள் மணலை
போட்டு வாய்க்காலை அடைத்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு,
புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம்,
கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல்,
செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில்
1,500 பாய்மர படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் நேற்று கடலுக்கு
செல்லவில்லை.ஏற்கனவே 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இருக்கும் நிலையில்,
தற்போது சூறைக்காற்றால் மீன்பிடி தொழில் முடங்கியதால் மீன் தட்டுப்பாடு
அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தி லும் தொடர்ந்து கடல்
சீற்றத்துடன் இருப்பதால் 700க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நேற்று 2வது
நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆந்திராவில் இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது
» கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானில் சிறைபிடிப்பு
» கடலில் கவிழ்ந்த படகு: தனுஷ், அப்புக்குட்டியை காப்பாற்றிய மீனவர்கள்
» குளச்சல் கடலில் தத்தளித்த படகு… கடலில் கவிழ்ந்த தனுஷ்,அப்புக்குட்டி
» உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன் ஏற்படுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum