கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானில் சிறைபிடிப்பு
Page 1 of 1

கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சகாய மைக்கேல் ஆண்டனி (வயது25), ஆண்டனி சுரேஷ்(26), ஆரோக்கியகெவின்ராஜ்(23). இவர்கள் 3 பேரும் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் ஒரு விசைப்படகு மூலம் கடந்த டிசம்பர் மாதம் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஈரான் கடற்படையினர் படகுகளில் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி மீனவர்களை சிறை பிடித்தனர். பிறகு அவர்களை படகுடன் பந்தராபஸ் என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அந்த 3 மீனவர்களும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் 4 மாதம் கழித்து தற்போது தான் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மீனவர்களை சிறையில் இருந்து மீட்க அவர்கள் முயற்சியில் இறங்கினார்கள். தமிழக அரசு, குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
ஆரோக்கியபுரம் பங்கு நிர்வாகம் சார்பிலும் மீனவர்களை மீட்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மீனவர்கள் 3 பேரும் 4 மாதமாக சிறையில் வாடுவதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈரானில் பாரிய நிலநடுக்கம்! ரெக்டர் அளவு 8.0, 7.8
» ஆந்திராவில் இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது
» பெரம்பலூர் அருகே தடம் மாறி சென்ற மினிபஸ் சிறைபிடிப்பு
» கன்னியாகுமரி சாம்பார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum