தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலில் கவிழ்ந்த படகு: தனுஷ், அப்புக்குட்டியை காப்பாற்றிய மீனவர்கள்

Go down

கடலில் கவிழ்ந்த படகு: தனுஷ், அப்புக்குட்டியை காப்பாற்றிய மீனவர்கள் Empty கடலில் கவிழ்ந்த படகு: தனுஷ், அப்புக்குட்டியை காப்பாற்றிய மீனவர்கள்

Post  ishwarya Fri Mar 22, 2013 4:39 pm

மீனவர் வேடத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் மரியான்.

இந்தப் படத்தை ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘வந்தே மாதரம்’ ஆல்பத்தை உருவாக்கிய பரத் பாலா இயக்குகிறார். தனுஷுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இவரின் இசையில் தனுஷ் நடிப்பது இதுவே முதல் முறை.

இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக சில காட்சிகளை கடலுக்குள் படமாக்க திட்டமிட்டு தனுஷ், அப்புக்குட்டி நடிக்கும் காட்சிகளை ஒரு படகில் வைத்து படமாக்கி வந்தார் இயக்குனர் பரத் பாலா. அப்போது பலத்த காற்று வீசியதால் தனுஷ் இருந்த படகு கடலில் கவிழ்ந்தது. உடனே பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் கடலில் குதித்து தனுஷ் மற்றும் அப்புக்குட்டியைக் காப்பாற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum