தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுக்கு குழம்பு

Go down

சுக்கு குழம்பு Empty சுக்கு குழம்பு

Post  ishwarya Fri May 24, 2013 2:16 pm

சுக்கு குழம்பு Bo953-150x150 சுக்கு குழம்பு Bo955-150x150சுக்கு குழம்பு Bo954-150x150




தேவையான பொருள்கள்:


  1. சுக்கு = 1 துண்டு
  2. வெந்தயம் = 1ஸ்பூன்
  3. மிளகு = 2 ஸ்பூன்
  4. புளி = சிறிய உருண்டை
  5. சின்ன வெங்காயம் = சிறிதளவு
  6. தக்காளி = 1
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் = சிறிதளவு
  10. மிளகாய் தூள் = அரை ஸ்பூன்
  11. கறிவேப்பிலை = சிறிதளவு
  12. எண்ணெய் = தேவையான அளவு
  13. உப்பு = தேவையான அளவு


செய்முறை:


  • சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டாக வெட்டி கொள்ளவும்.
  • சுக்கு, வெந்தயம், மிளகை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,
    கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு
    தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள்
    தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது பொடி செய்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான சுக்கு குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்திற்கும் பரிமாறலாம்.

சுக்கின் மருத்துவ குணங்கள்


  • சுக்கில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து,
    கார்போஹைட்டேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செம்பு,
    மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், குரோமியம், கரோட்டீன், தையாமின்,
    நியாசின் மற்றும் வைட்டமின் “சி” காணப்படுகிறது.
  • சுக்கு ஜலதோஷம், மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது. தலைவலியை குறைக்கும். வாய்வு கோளாறுகளை நீக்குகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயிற்று வலியை குறைக்கிறது. செரித்தலுக்கு உதவுகிறது.
  • தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது. உடல் உறுப்புகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum