சுக்கு குழம்பு
Page 1 of 1
சுக்கு குழம்பு
தேவையான பொருள்கள்:
செய்முறை:
சுவையான, ஆரோக்கியமான சுக்கு குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்திற்கும் பரிமாறலாம்.
சுக்கின் மருத்துவ குணங்கள்
- சுக்கு = 1 துண்டு
- வெந்தயம் = 1ஸ்பூன்
- மிளகு = 2 ஸ்பூன்
- புளி = சிறிய உருண்டை
- சின்ன வெங்காயம் = சிறிதளவு
- தக்காளி = 1
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் = சிறிதளவு
- மிளகாய் தூள் = அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை = சிறிதளவு
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டாக வெட்டி கொள்ளவும்.
- சுக்கு, வெந்தயம், மிளகை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு
தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள்
தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். - எண்ணெய் பிரிந்து வரும் போது பொடி செய்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான சுக்கு குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்திற்கும் பரிமாறலாம்.
சுக்கின் மருத்துவ குணங்கள்
- சுக்கில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து,
கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செம்பு,
மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், குரோமியம், கரோட்டீன், தையாமின்,
நியாசின் மற்றும் வைட்டமின் “சி” காணப்படுகிறது. - சுக்கு ஜலதோஷம், மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது. தலைவலியை குறைக்கும். வாய்வு கோளாறுகளை நீக்குகிறது.
- இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயிற்று வலியை குறைக்கிறது. செரித்தலுக்கு உதவுகிறது.
- தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது. உடல் உறுப்புகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum