பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
Page 1 of 1
பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்பழனியில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கிராமசாந்தி, ஆச்சார்ய காப்புக்கட்டு, அஸ்திர தேவர் பூஜை மற்றும் பூமிபூஜை ஆகியவை நடைபெற்றன. திங்கள்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம் நடத்தப்பட்டு, பின்னர் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து உபசாரமும் நடைபெற்றது. கொடிக்கட்டி மண்டபத்தில் ஆறு கலசங்கள் வைத்து மயூர யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, யானை முன்னே செல்ல நான்கு ரத வீதிகளிலும் கோயில் உள்பிரகாரத்திலும் வலம் வரச் செய்யப்பட்டு கொடிக்கட்டி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக மூலவர், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டது.
கொடிகட்டி மண்டபத்தில் ஓதுவா மூர்த்திகள் திருமுறைப் பாடல்கள், கொடிப்பண், சூர்ணிகை வர்ணித்தல் ஆகியவை பாட வேத கோஷங்களுடன் தங்கக் கொடி மரத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
கொடியேற்றம் முடிந்த பின் கொடிக்கட்டி மண்டபத்துக்கு எழுந்தருளிய தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித் தேர் உலாவும், ஜனவரி 27ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. ஜனவரி 30ஆம் தேதி தெப்பத் தேர் உலா மற்றும் திருக்கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தைப்பூசத் திருவிழா பாடல்
» தைப்பூசத் திருவிழா துவங்கியது
» பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
» பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங

Permissions in this forum:
You cannot reply to topics in this forum