பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Page 1 of 1

தீர்த்த யாத்திரைக்கு பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.
முன்னதாக பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளிதெய்வானையுடன் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. காலை 8.55 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து யாத்ரா தானம் நடத்தப்பட்டது. காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளிதெய்வானையுடன் வடக்கு கிரி வீதியில் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.35 மணிக்கு திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. சுவாமிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. தேருக்கு சிறப்பு பூஜைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.
அதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தேரின் முன் சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அதன் பின் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை பழனி கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் ராஜமாணிக்கம், போலீஸ் டி.ஐ.ஜி. அறிவு செல்வம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு குப்புராஜ், பழனி தொகுதி எம்.எல்.ஏ வேணுகோபாலு, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, ஊராட்சி ஒன்றிய தலைவர் ஏ.டி. செல்லச்சாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
மாலை 4.35 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, ஞானதண்டாயுத பாணி சுவாமிக்கு அரோகரா என்று விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர். பங்குனி உத்திர தேரோட்டத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மாநில பக்தர்களும் தீர்த்தக் காவடிகளுடன் வருகை தந்து முருகனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில் யானை கஸ்தூரி தேரினை முட்டித்தள்ளியது. வடக்கு கிரி வீதி, கிழக்கு கிரி வீதி, தெற்கு கிரி வீதி, மேற்கு கிரி வீதியில் கூடியிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருத்தேருக்கு முன்னதாக விநாயகர், வீரபாகு தெய்வங்கள் சிறிய தேர்களில் எழுந்தருளினர். மாலை 6.45 மணிக்கு தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
» பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்

» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
» பங்குனி உத்திர விரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum