திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
Page 1 of 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், நேற்று அதிகாலை 2.52 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.05 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ தூரமும் பக்தர்கள் வெள்ளம் காட்சியளித்தது. கிரிவலப்பாதையின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் வரை காத்திருந்த பிறகே தரிசனம் செய்ய முடிந்தது. கட்டண தரிசன வரிசை யிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோயிலுக்குள் சென்ற பக்தர்களை போலீசார் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். அதேபோல், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தீர்த்தவாரி: அண்ணாமலையாரை மகனாக பாவித்து சிவதொண்டு புரிந்த வள்ளாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் மாசி மகத்தன்று
நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நேற்று காலை 9 மணியளவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோயிலில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கொண்டாப்பட்டு ஆற்றுக்கு சென்றார். அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம்
» கிரிவலம் பாவங்களைப் போக்கும்
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம்
» கிரிவலம் பாவங்களைப் போக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum