சோகம் களையும் சோகத்தூர்
Page 1 of 1
சோகம் களையும் சோகத்தூர்
சோகத்தூர் எனும் இத்தலத்தை வடமொழியில் சோக அபஹத்ருபுரம் என்று அழைப்பர். முன்பொரு காலத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவினால் உபதேசிக்கப்பட்ட வேதங்களை அசுரர்கள் கவர்ந்து சென்றனர். வேதங்களை இழந்த பிரம்மா மிகுந்த சோகத்தோடு விஷ்ணுவிடம் தன் வேதனையைச் சொன்னார். அதற்கு பகவான் ‘‘தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்தின் தென்பாகத்திலும், கிழக்கே சமுத்திரத்திற்குமான நடுவே லட்சுமி ஸரஸ் எ ன்ற அழகான திருக்குளம் உள்ளது. அந்தக் குளக்கரையில் என்னைக் குறித்து தவம் செய்தால், அங்கு நான் தோன்றி உன் சோகத்தைப் போக்குவேன்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அதன்படி, பிரம்மா லட்சுமி ஸரஸ் எனும் திருக்குளக் கரையில் தவம் செய்ய, பகவான் அவருக்கு தரிசனம் அளித்ததோடு, அசுரர்களை அழித்து வேதங்களையும் மீட்டுத் தந்தார். இப்படியாக, பிரம்மாவின் சோகத்தைப் போக்கிய இத்தலம் சோக அபஹத்ருபுரம் என அழைக்கப்பட்டது. அந்த பெயரே நாளடைவில் திரிந்து சோகத்தூர் என்றாயிற்று. வைஷ்ணவ ஆச்சார்யர்களில் முக்கியமானவரான நாதமுனிகளின் திருவடிகளே சரணமென வாழ்ந்த எண்வரில் ஒருவராக சோகத்தூர் ஆழ்வான் திகழ்ந்தார். அஹோபில மடத்தில் 16வது பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீமதே ஸ்ரீவண் ஸடகோப, ஸ்ரீஸடகோப யதீந்திர மஹாதேசிகன் ஆகிய இரு வரின் அவதார தலமும் இதுவே ஆகும். மூலவராக அமிர்தவல்லி நாயிகா சமேத நரசிம்மன் கிழக்கு திசை நோக்கி யோகாநந்த சொரூபியாக பீடத்தில் அமர்ந்துள்ளார்; தசாவதார மூர்த் திகளுடன் அதி அற்புதமாக எழுந்தருளியுள்ளார். உற்சவராக பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார்.
மேலும், சோகத்தூர் ஆழ்வான், ராமானுஜர், நிகமாந்த மஹாதேசிகன், ஆதிவண் ஸடகோப யதீந்திர மஹாதேசிகன் ஆகிய மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளார்கள். புத்திர பாக்கியம் இல் லாதவர்களுக்கு மழலை வரத்தை அளிக்கும் பிரார்த்தனை தலமாக விளங்கும் இத்தலம் அஹோபில மடம் ஆதீன பரம்பரையைச் சேர்ந்தது. சென்னையிலிருந்து சுமார் 125 கி.மீ. தூரத்திலும், காஞ்சிபுரத்திற்கு தெற்கே வந்தவாசியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் சோகத்தூர் அமைந்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோகம் களையும் சோகத்தூர்
» கடுவினைகள் களையும் கோவிந்தன் திருச்சித்ரகூடம்

» இடுக்கண் களையும் இனிய நட்புச் செல்வம்
» சினேகாவின் சோகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum