தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரங்களின் நடுவே மக்களின் சோகம்

Go down

மரங்களின் நடுவே மக்களின் சோகம் Empty மரங்களின் நடுவே மக்களின் சோகம்

Post  meenu Fri Mar 01, 2013 5:46 pm

மரங்களின் நடுவே மக்களின் சோகம்-சிறப்புப் பெட்டகம்

இலங்கையின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் பல ஆண்டுகளாக சமூக பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளனர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்து வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து மோசமாகவே இருந்து வருவது இன்றளவும் யதார்த்தமாக உள்ளது.

தள்ளாத வயதிலும், தளராத உழைப்பு

அரசின் புள்ளி விபரங்களும் பொருளாதார அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

நாட்டில் மலையகப் பகுதியே ஏழைகள் அதிமாக வாழும் பகுதி எனவும் இலங்கை அரசே கூறுகிறது.

"உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை"

இலங்கை சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், மலையகம் மற்றும் இதர பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் வாழும் மக்களின் சமூகப் பொருளாதார நிலை மிகவும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது.

இலங்கையில் இன்று 1,25,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் ரப்பர் பயிரடப்படுவதாக ரப்பர் வாரியம் கூறுகிறது. நாட்டின் ஏற்றுமதியில் ரப்பரின் பங்கு சுமார் ஐந்து சதவீதம்.

கேகாலை, இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொனராகலை உட்பட பல மாவட்டங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதை மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா உட்பட மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த அரசு எண்ணியுள்ளது.

இந்நிலையில் ரப்பர் தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை குறித்து ஆராயும் நமது சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடரின் முதல் பகுதியை இங்கே கேட்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum