திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
Page 1 of 1

திருமலை: பல்வேறு மாநிலங்களில் பள்ளி இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் சுவாமி அருகே சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள். தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ளது.
இலவச தரிசனத்தில் 7 மணி நேரமும், ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரமும் ஆகிறது. மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், எப்போதும் 60 அடி தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதை மாற்றி 40 அடி தூரத்தில் குலசேகரப்படி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்தனர்.
கூட்டம் குறைவால் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் அறைகள் அனைத்தும் காலியாக காணப்பட்டன. தேர்வு முடியும் வரை இந்த நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது. கோயில் துணை செயல் அலுவலர் சின்னகாரு ரமணா கூறுகையில், கூட்டம் குறைவாக இருப்பதால் நேற்று காலை விஐபி பிரேக் முடிந்ததும் பக்தர்கள் அனைவரும் லகு தரிசனத்தில் சுவாமியை அருகில் சென்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர் என்றார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் : ஏழுமலையானை தரிசிக்க 28 மணி நேரமானது

» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
» திருப்பதியில் தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
» சக்ராஸ்னானம் – திருப்பதியில் பக்தர்கள் புனித நீராடினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum