திருநீரகம் கோவில்
Page 1 of 1
திருநீரகம் கோவில்
ஸ்தல வரலாறு.......
மூலவர் - உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர் - பேரகத்தான்.
தாயார் - அமுதவல்லி நாச்சியார்.
பாடியவர்கள் - திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்.
திரு ஊரகத்துக்குள்ளேயே திரு நீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் என்னும் 3 திருப்பதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 4 திருத்தலங்கள் ஒரே கோவிலில்! காரணம் சரிவரத் தெரியவில்லை. அரசியல் அல்லது மதப் பிரச்சனைகளால் இந்த இடப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்கலாம்.
திரு நீரகம் சந்நிதி, பெரிய காஞ்சீபுரத்தில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில் பிராகாரத்திலேயே இருக்கிறது. மூலவர் இல்லாத சந்நிதி இது. உற்சவராக ஜகதீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில, கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் நாமம், நிலமங்கை வல்லி, மூலவர் உள்ள பழைய சந்நிதி, எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
அதுபோல கோவிலின் உண்மையான வரலாறு முழுமையாக தெரியவில்லை. மிகப்பெரிய ஞாநியும் முனிவருமான `அக்ரூர' என்பவர்க்கு முன்வினைப் பயன் காரணமாக தெய்வ சாபங்கள் இருந்தன. கங்கையில் முழுகியும் அந்தப் பாவங்கள் விலகவில்லை.
கடைசியாக காஞ்சீபுரத்தில் தெற்கு நோக்கிக் கோவில் கொண்டிருக்கும் ஜகதீஸ்வரர் சன்னதிக்குச் சென்று தினமும் பிரார்த்தனை செய்தால் தோஷம் விலகும் என்று சொன்னதின் பேரில் அக்ரூர முனிவர் இங்கு வந்தார். அப்பொழுது அவர் இந்த கோவில் அருகே தனக்கென்று ஒரு புஷ்கரணியைத் தோண்டி அதில் நீராடினார்.
ஜகதீஸ்வரப் பெருமாள் அக்ரூர முனிவருக்கு காட்சி தந்து அவரது தெய்வ சாபங்களைப் போக்கினார். அன்று முதல் அந்த தீர்த்தம் அக்ரூர புஷ்கரணியாக மாறிற்று, திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி பாசுரம் பாடியிருக்கிறார்.
முன்ஜென்ம பாவங்கள் விலகவும் பெரியோர்கள் செய்த தவற்றைப் போக்கவும் எதிர்கால சந்ததிகள் இதுபோன்ற சாபங்களினால் திண்டாடாமல் இருக்கவும் இடம் மாறி வாழ்க்கைச் செல்லாமல் இருக்கவும் நோய் நொடிகள் வராமல் காப்பாற்றவும், குழந்தைகளது ஆரோக்கியம் மேம்படவும் இத்தலத்தில் வழிபட வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோவில் .........
» திருக்கோஷ்டியூர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
» விருத்தபுரீஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum