திருக்கோஷ்டியூர் கோவில்
Page 1 of 1
திருக்கோஷ்டியூர் கோவில்
ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர், எந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இதற்குண்டு.
பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.
இப்பெருமாளை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களும் உண்டு. மகாமகக் கிணறு என்னும் சம்மக் கிணறு இங்குள்ளது. இதில் மாசி மகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும்.
சவுமிய நாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேற்றியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திரபாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம்.
வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைத்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
» கோவில் .........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum