தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விருத்தபுரீஸ்வரர் கோவில்

Go down

விருத்தபுரீஸ்வரர் கோவில் Empty விருத்தபுரீஸ்வரர் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 12:46 am

மூலவர் - விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
அம்மன் - பெரியநாயகி
தல விருட்சம் - புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
தீர்த்தம் - இலட்சுமி, பிரம தீர்த்தம்
ஆகமம் - சிவாகமம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - புன்னை வனம்
மாவட்டம் - புதுக்கோட்டை

ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். இலிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார்.

பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் “பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், இலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக இலிங்கம் எனப்பட்டது. “சதுர்” என்றால் “நான்கு.” இந்த இலிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது.

பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டுப் பாணியையும், பாண்டியநாட்டுப் பாணியையும் கலந்து ஒரு கோயிலை எழுப்பினான். சோழர் கோயில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும். பாண்டியர் கோயில்களில் இதற்கு நேர்மாறாக இருக்கும். இது கலப்படக் கோயில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது.

மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய இலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை “விருத்தபுரீஸ்வரர்” என அழைத்தனர். “விருத்தம்” என்றால் “பழமை.” இவர் “பழம்பதிநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.

கோயிலின் சுற்றுப்பகுதியில், பஞ்ச விநாயகர், கபிலரின் 9 குமாரர்கள், ஆதி சிவனடியார்கள், தெட்சிணாமூர்த்தி, தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. சிவனுக்கு இடப்புறம் அம்மன் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருளுகிறாள்.

அம்மனுக்கு எதிரில் குடவரை காளி சன்னதி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலம் இது ஒன்று தான். பெரிய சிவலிங்கத்திற்கு தகுந்தாற்போல் மிகப்பெரிய பலிபீடம் உள்ளது. இத்ததல விநாயகர் ஆகண்டல விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum