உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்
மூலவர் - காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி
உற்சவர் - அழகம்மை
தல விருட்சம் - மகிழ மரம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் - மாகாளிக்குடி
மாவட்டம் - திருச்சி
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் “உச்சினி மாகாளி, உச்சிமாகாளி” என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாகச் சொல்வர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள். சிவபெருமானே உமையாளை இடப்பாகத்தில் கொண்டு உமையொருபாகனாகக் காட்சி தருகிறார்.
அம்பிகை அர்த்தநாரீசுவர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருவதை திருச்சி மாவட்டம் மாகாளிக்குடி ஆனந்த சவுபாக்கிய சுந்தரி கோயிலில் மட்டுமே காணமுடியும். இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள் கருவறை விமானம் மாறுபட்ட தோற்றத்துடன், நான்கு மூலைகளிலும் அம்பாளுக்குரிய சிம்மத்திற்குப் பதிலாக ரிடபத்துடன் காணப்படுகிறது.
வாயுமூலையில் சுதை வடிவில் முருகப்பெருமானும், அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீனதேசத்து மனித உருவமும் உள்ளது. இவர் பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் என்கின்றனர். தர்மசாஸ்தா எங்கும் காண இயலாதவாறு மனைவி, குழந்தை, யானை வாகனம் சகிதமாக அய்யனராக வீற்றிருக்கிறார்.
கருவறையிலுள்ள அம்பாளை ஆனந்த சவுபாக்ய சுந்தரி என்கின்றனர். புடைப்புச் சிற்பமாக, தாண்டவ கோலத்தில் சாந்தபாவனையில், விரித்த சடைகளோடு அசுர சம்காரம் செய்யும் நிலையில் காணப்படுகிறாள்.
மேலும், அர்த்தநாரீசுவரர் சந்நிதியில், வழக்கமான தோற்றத்துக்கு மாறாக, அம்பாள் வலப்புறமும், இறைவன் இடப்புறமுமாக உள்ளனர் இங்கு காஞ்சி மகா பெரியவர் அளித்த ஐம்பொன்னால் ஆன நர்த்தன விநாயகர் சிலையும், பஞ்சலோக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.
போக்குவரத்து வசதி..... திருச்சி, சமயபுரத்திற்கு கிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உஜ்ஜயினி காளியம்மன் திருக்கோயில்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வனபத்ர காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வக்ர காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வனபத்ர காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வக்ர காளியம்மன் கோவில்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum