வனபத்ர காளியம்மன் கோவில்
Page 1 of 1
வனபத்ர காளியம்மன் கோவில்
மூலவர் - வனபத்ர காளியம்மன்
தல விருட்சம் - தொரத்திமரம்
தீர்த்தம் - பவானி தீர்த்தம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்பு
மாவட்டம் - கோயம்புத்தூர்
ஸ்தல வரலாறு....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.
அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. கோவிலையொட்டி மேல்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பானதாகும்.
தாங்கள் எண்ணிய காரியம் நிறைவேற அம்மனை வேண்டி விரதம் இருந்து பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவார்கள். ஆடிப்பெருக்கன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் அருகேயுள்ள பவானி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பனம் செய்வார்கள்.
7 கல் எடுத்து அவற்றுக்கு விபூதி பூசுவார்கள். பின்னர் சந்தனம், குங்கும் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள். புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம்.
சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.
ஆடி அமாவாசை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெறும். அன்னையை அமாவாசை தோறும் வழிபடுவோர் பில்லி, சூனியம் போன்ற இடர்பாடுகளில் இருந்து விலகி இன்சுகம் பெறுவதாக ஐதீகம். எனவே ஆடி அமாவாசை இந்த கோவிலின் விசேசமான நாளாகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உள்ளது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» கொண்டத்து காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» கொண்டத்து காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
» வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum