ஜாக்கிங்கின் முக்கியத்துவம் என்ன என்று பார்ப்போமா.
Page 1 of 1

ஜாக்கிங் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டம். மேலைநாடுகளில் 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட வயதினர் மிகவும் அதிக அளவு இதயதாக்கத்திற்கு ஆளாகி வருவதைக் கண்டனர்.
இது தொடர்பாக ஆய்வு நிகழ்த்திய ஆய்வு வல்லுநர்கள், இந்த வயதில் இவர்களுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாததால் இரத்த ஓட்டத்திறன் குறைவதால், மிகவும் எளிதாக இதய இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைய வாய்ப்பு உள்ளதெனக் கூறுகின்றார்கள். நடுத்தர வயதில் இவர்கள் டென்னிஸ், கால் பந்தாட்டம் போன்ற கடுமையான உடலுழைப்பை ஈர்க்கக் கூடிய விளையாட்டுகளில் ஈடுபட இயலாது.
உடலுக்கு அதிக சிரமம் அளிக்காததும் அன்றாடம் மேற்கொள்ளக்கூடிய ஒரு எளிய உடற்பயிற்சியைக் கண்டுபிடித்தனர். அதுதான் மெல்லோட்டம் என்பதாகும். இதயதாக்கத்தின் அதிரடியைச் சமாளிக்கவும், இதயத்திற்குப் போதிய இரத்த ஓட்டத்தை அளிக்கவும் கண்டுபிடிக்கப்பட்ட எளிய உடற்பயிற்சி இது.
15 வயதிற்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். எனவே மெல்லோட்டம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்ற அதிக பொருட் செலவில்லாத எளிய உடற்பயிற்சியாகும். மேலைநாடுகளிலுள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள், இதயதாக்கத்திலிருந்து (Heart attacke) தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த தடுப்பு முறையாகப் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரைக் கலந்து, உங்கள் இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, இரத்த அழுத்த அளவு, இவற்றை நன்கு பரிசோதித்து, உங்கள் உடலின் தகுதியைச் சோதித்துக் கொள்ளுவது நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கை சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?
» ரத்த பரிசோதனை மூலம் 5 வார கருவை என்ன குழந்தை என்று அறியலாம்
» ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அஜித்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum